காளானின் மருத்துவ குணம் mashroom
- ஒரு விரிவான அலசல்
(கட்டுரையின் கரு மாற்று மருத்துவம் புத்தகத்தில் வெளியானது)
சிப்பிக்காளான் மொக்குக்காளான்
உலகில் 380,000 வகையான காளான்கள் உள்ளன. அதில் நாம் உணவாக உட்கொள்ள 65 வகையான காளானே ஏற்றது. இதில் இந்தியாவில் 8 வகையான காளான்கள் உள்ளன. இவற்றுள் மொக்குக்காளான், சிப்பிக்காளான், வைக்கோல் காளான் என்ற மூன்று வகை மட்டுமே அதிகஅளவில் உற்பத்தி செய்யப்படுகிறது.காளான் மிகுந்த சுவையுள்ளதாகவும், மிகுந்த சத்துக்கள் கொண்டதாகவும் இருப்பதோடு மிகுந்த மருத்துவப் பயன் கொண்டதாக உள்ளது.
காளான் மற்றும் கிரீன் டீ அடிக்கடி சாப்பிடும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் 90 சதவீதம் குறைகிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.புற்றுநோயை உருவாக்கும் ஹார்மோனை தடுக்கும் அல்லது கட்டுப்படுத்தும் ஆற்றல் காளான்களுக்கு இருப்பதும் இந்த ஆய்வின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.சீனா வில் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் தொடர்ச்சியாக பல்வேறு நாட்டு ஆராய்ச்சியாளர்களும் காளானை கையில் எடுத்துக்கொண்டு ஆராய்ச்சியில் குதித்து இருக்கிறார்கள்.
காளான் மருத்துவ பயன்கள்:
1) உடலில் கெட்ட கொழுப்பை கரைக்கிறது.
2) மாரடைப்பை தடுக்கிறது
3) உயர் இரத்த அழுத்தம் உருவாவதை தடுக்கிறது
4)குறைந்த இரத்த அழுத்தம் ஏற்ப்படாமல் தடுக்கிறது
5) இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது
6)உடல் சத்துக்களை சமன் செய்கிறது
7) இதயத்தை வலுவாக்கிறது
8) உடலுக்கு மிக அவசியமான பொட்டாசியம் சத்து நிறைந்தது
9) இது ஒரு மூட்டு வாத நிவாரணியாகும்.(தாமிர சத்து )
10) மலட்டுத்தன்மை போக்கும்
11) கருப்பை நோய்கள் தடுக்கும்
12) புரதச்சத்து நிறைந்தது
13) அமினோ அமிலங்கள் நிறைந்தது
14) மலச்சிக்கலைத் தீர்க்கும்
15) வயிற்றுப்புண் ஆற்றும்
16) ஆசனப்புண் குணமாகும்
17) ஆறாத உடல் புண்களை குணப்படுத்தும்
18) உடல் வளர்சிக்கு துணைபுரியும் வைட்டமின்கள் அடங்கியது
19)உடல் எடையைக் குறைக்கும் காளான்
20)புற்று நோயய் தடுக்கிறது
இனி விரிவாக காண்போம்
1)உடலில் கெட்ட கொழுப்பை கரைக்கிறது, 2)மாரடைப்பை தடுக்கிறது, 3)உயர் இரத்த அழுத்தம் உருவாவதை தடுக்கிறது, 4)குறைந்த இரத்த அழுத்தம் ஏற்ப்படாமல் தடுக்கிறது:-
காளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்துஇரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது.இதனால் மாரடைப்பும் வருவது தவிர்க்கப்படுகிறது
5)இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது, 6)உடல் சத்துக்களை சமன் செய்கிறது, 7)இதயத்தை வலுவாக்கிறது
காளானில் உள்ள லென்ட்டைசின் (lentysine) எரிட்டிடைனின் (eritadenin) என்ற வேதிப் பொருட்கள் இரத்தத்தில் கலந்துள்ள ட்ரை கிளிசஸ்ரைடு பாஸ்போலிட் போன்றவற்றை வெகுவாகக் குறைக்கிறது.இதில் எரிட்டினைன் கொழுப்புப் பொருட்களை எந்தவித பாதிப்பும் இல்லாமல் இரத்தத்திலிருந்து வெளியேற்றி பிற திசுக்களுக்கு அனுப்பி உடலை சமன் செய்கிறது.இவ்வாறு உடலில் அதிகம் தேவையில்லாமல் சேரும் கொழுப்புகட்டுப்படுகிறது. இதனால் இரத்தம் சுத்தமடைவதுடன் இதயம் பலப்பட்டு நன்கு சீராக செயல்படுகிறது. இதயத்தை பாதுகாப்பதில் காளானின் பங்கு அதிகம்.
8)உடலுக்கு மிக அவசியமான பொட்டாசியம் சத்து நிறைந்தது
பொதுவாக உயர் இரத்த அழுத்தம் ஏற்படும்போது உட்புறச் செல்களில் பொட்டாசியத்தின் அளவு குறையும். வெளிப்புறச் செல்களில் உள்ள சோடியம், உட்புறமுள்ள பொட்டாசியத்திற்கு சமமாக இருக்கும். இரத்த அழுத்தத்தின் போது வெளிப்புறத்தில் சோடியம் அதிகரிப்பதால் சமநிலை மாறி உற்புறத்தில் பொட்டாசியத்தின் அளவு குறைகிறது. இதனால் இதயத்தின் செயல்பாடு மாறிவிடுகிறது.இத்தகைய நிலையைச் சரிசெய்ய பொட்டாசியம் சத்து தேவை. அவை உணவுப்பொருட்களின் மூலம் கிடைப்பது சாலச் சிறந்தது. அந்த வகையில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ள உணவு காளான்தான். 100 கிராம் காளானில் பொட்டாசியம் சத்து 447 மி.கி. உள்ளது. சோடியம் 9 மி.கி உள்ளது. எனவே இதயத்தைக் காக்க சிறந்த உணவாக காளான் உள்ளது.
9)இது ஒரு மூட்டு வாத நிவாரணியாகும்..(தாமிர சத்து )
மேலும் காளானில் தாமிரச்சத்து உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. தாமிரச்சத்து இரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்பை சீர்செய்யும்.
காளான் மூட்டு வாதம் உடையவர்களுக்கு சிறந்த நிவாரணியாகும்.
10)மலட்டுத்தன்மை போக்கும், 11)கருப்பை நோய்கள் தடுக்கும்
மலட்டுத்தன்மை, பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள் போன்றவற்றைக் குணப்படுத்துகிறது.தினமும் காளான் சூப் அருந்துவதால் பெண்களுக்கு உண்டாகும் மார்பகப் புற்று நோய் தடுக்கப்படுவதாக காளான் பற்றிய சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர்.
12)புரதச்சத்து நிறைந்தது 13)அமினோ அமிலங்கள் நிறைந்தது
100 கிராம் காளானில் 35 சதவீதம் புரதச்சத்து உள்ளது. மேலும் உடல் வளர்ச்சிக்குத் தேவையான எட்டு வகை அமினோ அமிலங்கள் உள்ளதால், குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு சிறந்த ஊட்டசத்தாக அமைகிறது எளிதில் சீரணமாகும் தன்மைகொண்டது.மலச்சிக்கலைத் தீர்க்கும் தன்மை கொண்டது.
கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் தினமும் காளான் சூப் அருந்தி வந்தால் விரைவில் உடல் தேறும்.
14) மலச்சிக்கலைத் தீர்க்கும், 15)வயிற்றுப்புண் ஆற்றும், 16)ஆசனப்புண் குணமாகும்
காளானை முட்டைகோஸ், பச்சைப் பட்டாணியுடன் சேர்த்து சமைத்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண், ஆசனப்புண் குணமாகும்.
17)ஆறாத உடல் புண்களை குணப்படுத்தும்,18)உடல் வளர்சிக்கு துணைபுரியும் வைட்டமின்கள் அடங்கியது
ஆறாத புண்களைக் குணப்படுத்தி டானிக் போல உடலுக்குச் சக்தி தரும் காளானில் வைட்டமின் – ‘ஏ’ அதிக அளவில் இருக்கிறது. வைட்டமின் ‘பி’,‘டி’, ‘இ’ ஆகியன ஓரளவு உள்ளன.
19)உடல் எடையைக் குறைக்கும் காளான்
அதிக சக்தி கொண்ட உணவை எடுத்துக் கொள்வதைக் காட்டிலும் குறைந்த சக்தியை அளிக்கக்கூடிய காளான் போன்ற உணவு வகைகளை சாப்பிடுவதால் உடல் குண்டாவதைத் தவிர்க்க முடியும் என்று டாக்டர் செஸ்கின் தலைமையில் நடத்தப்பட்ட ஆய்வில், தெரிவிக்கப்பட்டுள்ளது.
20)புற்று நோயய் தடுக்கிறது
ஆஸ்திரேலியாவிலும் ஒரு பெரிய ஆராய்ச்சி நிகழ்த்தப்பட்டது. இரண்டாயிரம் பெண்களை வைத்து நிகழ்த்தப்பட்ட இந்த விரிவான ஆராய்ச்சி, கான்சருக்கான பிற காரணிகளையும் கருத்தில் கொண்டே நிகழ்த்தப்பட்டிருக்கிறது காளானை உட்கொள்வதும், கூடவே கிரீன் டீ உட்கொள்வதும் கான்சரிலிருந்து விலகி இருக்க உதவும் என்பதையே இந்த ஆய்வு முடிவுகள் எடுத்துச் சொல்கின்றன.
எச்சரிக்கை குறிப்பு :
1)காளான் தாய்ப்பாலை வற்றவைக்கும் தன்மை கொண்டதால் பாலூட்டும் பெண்கள் காளான் உண்பதைத் தவிர்ப்பது நல்லது.
2)சில வகை காளான்களை உண்ணலாம். சிலவகை, போதை தரும். சிலவகை, பயங்கர விஷம். எல்லாமே ஒன்றுபோலவே தோன்றும். ஆகவே, கவனமாகப் பார்த்துத் தேர்ந்தெடுக்கவேண்டும். விஷக் காளான்கள் துர்நாற்றம் வீசக்கூடியதாகவும், அதிக வண்ண முடையதாகவும் இருக்கும்.
3)விஷக்காளானை உண்டுவிட்டால் உடனடியாக சோம்புக்கஷாயம் பருகவும் சோம்புக்கஷாயம் பாம்பின் விஷம், காளான் விஷம் இவற்றை முறிக்கும்
4)கடைகளில் விற்கப்படும் போலி காளான் எச்சரிக்கை
இந்த சாப்பிட்டால் மேலே சொன்ன அனைத்து பலன்களுக்கும் எதிர் விளைவுதான் உண்டாகும் ப்பற்றி அறிந்து கொள்ள இந்த பக்கத்தை படிக்கவும்
http://suvaiinbam.blogspot.in/2013/02/blog-post.html
- ஒரு விரிவான அலசல்
(கட்டுரையின் கரு மாற்று மருத்துவம் புத்தகத்தில் வெளியானது)
சிப்பிக்காளான் மொக்குக்காளான்
உலகில் 380,000 வகையான காளான்கள் உள்ளன. அதில் நாம் உணவாக உட்கொள்ள 65 வகையான காளானே ஏற்றது. இதில் இந்தியாவில் 8 வகையான காளான்கள் உள்ளன. இவற்றுள் மொக்குக்காளான், சிப்பிக்காளான், வைக்கோல் காளான் என்ற மூன்று வகை மட்டுமே அதிகஅளவில் உற்பத்தி செய்யப்படுகிறது.காளான் மிகுந்த சுவையுள்ளதாகவும், மிகுந்த சத்துக்கள் கொண்டதாகவும் இருப்பதோடு மிகுந்த மருத்துவப் பயன் கொண்டதாக உள்ளது.
காளான் மற்றும் கிரீன் டீ அடிக்கடி சாப்பிடும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் 90 சதவீதம் குறைகிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.புற்றுநோயை உருவாக்கும் ஹார்மோனை தடுக்கும் அல்லது கட்டுப்படுத்தும் ஆற்றல் காளான்களுக்கு இருப்பதும் இந்த ஆய்வின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.சீனா
காளான் மருத்துவ பயன்கள்:
1) உடலில் கெட்ட கொழுப்பை கரைக்கிறது.
2) மாரடைப்பை தடுக்கிறது
3) உயர் இரத்த அழுத்தம் உருவாவதை தடுக்கிறது
4)குறைந்த இரத்த அழுத்தம் ஏற்ப்படாமல் தடுக்கிறது
5) இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது
6)உடல் சத்துக்களை சமன் செய்கிறது
7) இதயத்தை வலுவாக்கிறது
8) உடலுக்கு மிக அவசியமான பொட்டாசியம் சத்து நிறைந்தது
9) இது ஒரு மூட்டு வாத நிவாரணியாகும்.(தாமிர சத்து )
10) மலட்டுத்தன்மை போக்கும்
11) கருப்பை நோய்கள் தடுக்கும்
12) புரதச்சத்து நிறைந்தது
13) அமினோ அமிலங்கள் நிறைந்தது
14) மலச்சிக்கலைத் தீர்க்கும்
15) வயிற்றுப்புண் ஆற்றும்
16) ஆசனப்புண் குணமாகும்
17) ஆறாத உடல் புண்களை குணப்படுத்தும்
18) உடல் வளர்சிக்கு துணைபுரியும் வைட்டமின்கள் அடங்கியது
19)உடல் எடையைக் குறைக்கும் காளான்
20)புற்று நோயய் தடுக்கிறது
இனி விரிவாக காண்போம்
1)உடலில் கெட்ட கொழுப்பை கரைக்கிறது, 2)மாரடைப்பை தடுக்கிறது, 3)உயர் இரத்த அழுத்தம் உருவாவதை தடுக்கிறது, 4)குறைந்த இரத்த அழுத்தம் ஏற்ப்படாமல் தடுக்கிறது:-
காளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்துஇரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது.இதனால் மாரடைப்பும் வருவது தவிர்க்கப்படுகிறது
5)இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது, 6)உடல் சத்துக்களை சமன் செய்கிறது, 7)இதயத்தை வலுவாக்கிறது
காளானில் உள்ள லென்ட்டைசின் (lentysine) எரிட்டிடைனின் (eritadenin) என்ற வேதிப் பொருட்கள் இரத்தத்தில் கலந்துள்ள ட்ரை கிளிசஸ்ரைடு பாஸ்போலிட் போன்றவற்றை வெகுவாகக் குறைக்கிறது.இதில் எரிட்டினைன் கொழுப்புப் பொருட்களை எந்தவித பாதிப்பும் இல்லாமல் இரத்தத்திலிருந்து வெளியேற்றி பிற திசுக்களுக்கு அனுப்பி உடலை சமன் செய்கிறது.இவ்வாறு உடலில் அதிகம் தேவையில்லாமல் சேரும் கொழுப்புகட்டுப்படுகிறது. இதனால் இரத்தம் சுத்தமடைவதுடன் இதயம் பலப்பட்டு நன்கு சீராக செயல்படுகிறது. இதயத்தை பாதுகாப்பதில் காளானின் பங்கு அதிகம்.
8)உடலுக்கு மிக அவசியமான பொட்டாசியம் சத்து நிறைந்தது
பொதுவாக உயர் இரத்த அழுத்தம் ஏற்படும்போது உட்புறச் செல்களில் பொட்டாசியத்தின் அளவு குறையும். வெளிப்புறச் செல்களில் உள்ள சோடியம், உட்புறமுள்ள பொட்டாசியத்திற்கு சமமாக இருக்கும். இரத்த அழுத்தத்தின் போது வெளிப்புறத்தில் சோடியம் அதிகரிப்பதால் சமநிலை மாறி உற்புறத்தில் பொட்டாசியத்தின் அளவு குறைகிறது. இதனால் இதயத்தின் செயல்பாடு மாறிவிடுகிறது.இத்தகைய நிலையைச் சரிசெய்ய பொட்டாசியம் சத்து தேவை. அவை உணவுப்பொருட்களின் மூலம் கிடைப்பது சாலச் சிறந்தது. அந்த வகையில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ள உணவு காளான்தான். 100 கிராம் காளானில் பொட்டாசியம் சத்து 447 மி.கி. உள்ளது. சோடியம் 9 மி.கி உள்ளது. எனவே இதயத்தைக் காக்க சிறந்த உணவாக காளான் உள்ளது.
9)இது ஒரு மூட்டு வாத நிவாரணியாகும்..(தாமிர சத்து )
மேலும் காளானில் தாமிரச்சத்து உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. தாமிரச்சத்து இரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்பை சீர்செய்யும்.
காளான் மூட்டு வாதம் உடையவர்களுக்கு சிறந்த நிவாரணியாகும்.
10)மலட்டுத்தன்மை போக்கும், 11)கருப்பை நோய்கள் தடுக்கும்
மலட்டுத்தன்மை, பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள் போன்றவற்றைக் குணப்படுத்துகிறது.தினமும் காளான் சூப் அருந்துவதால் பெண்களுக்கு உண்டாகும் மார்பகப் புற்று நோய் தடுக்கப்படுவதாக காளான் பற்றிய சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர்.
12)புரதச்சத்து நிறைந்தது 13)அமினோ அமிலங்கள் நிறைந்தது
100 கிராம் காளானில் 35 சதவீதம் புரதச்சத்து உள்ளது. மேலும் உடல் வளர்ச்சிக்குத் தேவையான எட்டு வகை அமினோ அமிலங்கள் உள்ளதால், குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு சிறந்த ஊட்டசத்தாக அமைகிறது எளிதில் சீரணமாகும் தன்மைகொண்டது.மலச்சிக்கலைத் தீர்க்கும் தன்மை கொண்டது.
கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் தினமும் காளான் சூப் அருந்தி வந்தால் விரைவில் உடல் தேறும்.
14) மலச்சிக்கலைத் தீர்க்கும், 15)வயிற்றுப்புண் ஆற்றும், 16)ஆசனப்புண் குணமாகும்
காளானை முட்டைகோஸ், பச்சைப் பட்டாணியுடன் சேர்த்து சமைத்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண், ஆசனப்புண் குணமாகும்.
17)ஆறாத உடல் புண்களை குணப்படுத்தும்,18)உடல் வளர்சிக்கு துணைபுரியும் வைட்டமின்கள் அடங்கியது
ஆறாத புண்களைக் குணப்படுத்தி டானிக் போல உடலுக்குச் சக்தி தரும் காளானில் வைட்டமின் – ‘ஏ’ அதிக அளவில் இருக்கிறது. வைட்டமின் ‘பி’,‘டி’, ‘இ’ ஆகியன ஓரளவு உள்ளன.
19)உடல் எடையைக் குறைக்கும் காளான்
அதிக சக்தி கொண்ட உணவை எடுத்துக் கொள்வதைக் காட்டிலும் குறைந்த சக்தியை அளிக்கக்கூடிய காளான் போன்ற உணவு வகைகளை சாப்பிடுவதால் உடல் குண்டாவதைத் தவிர்க்க முடியும் என்று டாக்டர் செஸ்கின் தலைமையில் நடத்தப்பட்ட ஆய்வில், தெரிவிக்கப்பட்டுள்ளது.
20)புற்று நோயய் தடுக்கிறது
ஆஸ்திரேலியாவிலும் ஒரு பெரிய ஆராய்ச்சி நிகழ்த்தப்பட்டது. இரண்டாயிரம் பெண்களை வைத்து நிகழ்த்தப்பட்ட இந்த விரிவான ஆராய்ச்சி, கான்சருக்கான பிற காரணிகளையும் கருத்தில் கொண்டே நிகழ்த்தப்பட்டிருக்கிறது காளானை உட்கொள்வதும், கூடவே கிரீன் டீ உட்கொள்வதும் கான்சரிலிருந்து விலகி இருக்க உதவும் என்பதையே இந்த ஆய்வு முடிவுகள் எடுத்துச் சொல்கின்றன.
எச்சரிக்கை குறிப்பு :
1)காளான் தாய்ப்பாலை வற்றவைக்கும் தன்மை கொண்டதால் பாலூட்டும் பெண்கள் காளான் உண்பதைத் தவிர்ப்பது நல்லது.
2)சில வகை காளான்களை உண்ணலாம். சிலவகை, போதை தரும். சிலவகை, பயங்கர விஷம். எல்லாமே ஒன்றுபோலவே தோன்றும். ஆகவே, கவனமாகப் பார்த்துத் தேர்ந்தெடுக்கவேண்டும். விஷக் காளான்கள் துர்நாற்றம் வீசக்கூடியதாகவும், அதிக வண்ண முடையதாகவும் இருக்கும்.
3)விஷக்காளானை உண்டுவிட்டால் உடனடியாக சோம்புக்கஷாயம் பருகவும் சோம்புக்கஷாயம் பாம்பின் விஷம், காளான் விஷம் இவற்றை முறிக்கும்
4)கடைகளில் விற்கப்படும் போலி காளான் எச்சரிக்கை
இந்த சாப்பிட்டால் மேலே சொன்ன அனைத்து பலன்களுக்கும் எதிர் விளைவுதான் உண்டாகும் ப்பற்றி அறிந்து கொள்ள இந்த பக்கத்தை படிக்கவும்
http://suvaiinbam.blogspot.in/2013/02/blog-post.html
காளான் பற்றி இறைத்தூதர்(ஸல்) அவர்கள்:-
ReplyDeleteஇறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
சமையல் காளான் 'மன்னு' வகையைச் சேர்ந்தது ஆகும். அதன் சாறு கண்ணுக்கு நிவாரணமாகும்.
என ஸயீத் இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார்.
ஷுஅபா இப்னு ஹஜ்ஜாஜ்(ரஹ்) கூறினார்:
இன்னோர் அறிவிப்பாளர்தொடர் வழியாக ஹகம் இப்னு உ(த்)தைபா(ரஹ்) எனக்கு இந்த ஹதீஸை அறிவித்தார்கள். அவர்கள் இந்த ஹதீஸை அறிவித்தபோது தான் அப்துல் மலிக் இப்னு உமைர்(ரஹ்) அவர்களிடம் நான் கேட்டிருந்த (இந்த ஹதீஸ் எனக்கு உறுதியானது.) இந்த ஹதீஸை நிராகரிக்காத நிலைக்கு வந்தேன்.
ஸஹீஹ் புகாரி 5708