Sunday, April 14, 2013

வாழ்நாளை அதிகரிக்கும் உணவுப் பழக்கங்கள் பாகம் 1

வாழ்நாளை அதிகரிக்கும் உணவுப் பழக்கங்கள் பாகம் 1

ஆக்கம்:-
உங்கள் வாழ்வில் என்றும் அக்கரை கொண்ட சுவைஇன்பம் குழுமம் 



ஆபத்தான நோய்களைத் தவிர்க்கும் உணவுப் பழக்கம்! 

இந்தியாவில் தற்போது இதய நோய், எலும்பு மெலிவு நோய், இரத்த கொதிப்பு, மார்பகப் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய், ஆஸ்துமா போன்றவைதாம் பெரும்பாலானவர்களுக்கு வருகின்றன.

உங்கள் பரம்பரையில் யாராவது இதற்கு முன்பு மாரடைப்பு நோயினால் பாதிக்கப்பட்டிருந்தால் உங்களுக்கும் அவை வர வாய்ப்புண்டு. எனவே அடிக்கடி அசைவம் சாப்பிடும் பழக்கம் இருந்தால் அதை நிறுத்துங்கள். இனி விலங்குப் புரதம் உங்கள் உணவில் சேராமல் பார்த்துக் கொள்வது அவசியம்.

அசைவம் சாப்பிட வேண்டும் போல் ஆசையாக இருந்தால், எப்போதாவது மீன் சாப்பிடலாம். அபூர்வமாகக் நாட்டு கோழி உணவை சேர்த்துக் கொள்ளலாம்.

ஹோமோ சிஸ்டைன் என்ற அமினோ அமிலம் இரத்தத்தில் அதிகமானால் அவை இரத்தக் குழாய்களுக்குத் தீங்கை உண்டாக்கும். இதனால் இதயப்பைச் சுவரின் தசைக்கு இரத்தம் வழங்கும் அமைப்புகளில் தடை ஏற்படும்.

அதிகமாக மது அருந்துபவர்களுக்கும், சிப்ஸ், கருவாடு ஆகியவற்றை அடிக்கடி சாப்பிடுகிறவர்களுக்கும் இரத்தக்கொதிப்பு வரக்கூடிய அபாயம் உண்டு. இவர்கள் நார்ச்சத்து உணவு, ஒரு கப் யோகர்ட், கொழுப்பு நீக்கப்பட்ட பால், வாழைப்பழம் முதலியவற்றை தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டும். உப்பு, மது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். காலையில் பழங்கள் சாப்பிடுவது நல்லது. நீரிழிவு நோய் இருந்தால் இதுவும் கூடாது.

நீரிழிவு நோயாளிகள் இனிப்பை முழுவதுமாகக் குறைக்க வேண்டும். வெந்தயதூளைக் கண்டிப்பாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும். மைதாமாவில் ஆன ரொட்டியைத் தவிர்க்க வேண்டும். அதற்காகப் பட்டினி கிடக்கக்கூடாது.

ஆஸ்டியோபோரோசிஸ் என்ற எலும்பு மெலிவு நோய் பெரும்பாலும் பெண்களுக்கே வருகிறது. சோயா மொச்சை, பசலைக்கீரை, கொண்டைக்கடலை, ஆரஞ்சுச் சாறு போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்தால் கால்சியமும், வைட்டமின் ‘டி’யும் உடலுக்கு நன்கு கிடைக்கும். காபி, டீ, உப்பு வேண்டாம்.

மார்பகப் புற்றுநோயாளிகள் முழுக்க பழங்கள் மற்றும் வேகவைத்த காய்கறிகள் ஆகியவற்றை மட்டுமே சாப்பிடுவது நல்லது. சோயா பால் மற்றும் சோயா தயிரைச் சேர்த்துக் கொள்வது நல்லது.

பெருங்குடல் புற்று நோயாளிகள் ஒரு கப் சாதம், ஒரு சப்பாத்தி என்று அவ்வப்போது குறைவாக உண்பது நல்லது. செயற்கை இனிப்பு, மட்டன், மது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். எலுமிச்சம் பழச்சாறு, முட்டை கோசு சாறு ஆகியவை நன்மையைத் தரும்.

தினமும் 30 நிமிடங்கள் துரிதநடை நடப்பவர்க்கு 40% பெருங்குடல் புற்றுநோய் அபாயம் குறைகிறது என்கிறது சமீபத்தில் நார்வேயில் எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்று.

எந்த நோயும் இல்லாதவர்கள் மேற்கண்ட உணவு முறைகளைப் பழக்கத்திற்கு கொண்டு வந்தால் உடல் நலத்துடன் வாழலாம். அளவுடன், சத்துணவு சாப்பிட்டதாகவும் இருக்கும். குறிப்பாக உடல் பருமனாகாமல் இருப்பதால் தான் மூச்சுக்குழல் சம்பந்தமான நோய்கள் தடுக்கப்படுகின்றன.

2 comments:

  1. பயனுள்ள பாகம்... தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. தங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி திண்டுக்கல் தனபாலன் அண்ணா

    ReplyDelete