உணவின் மூலம் பற்களை பாதுகாப்பது எப்படி
பற்களை பாதுகாக்கும் உணவு வகைகள் மற்றும் உணவு முறைகள்
நம்மில் பலபேருக்கு பல்தான் தகறாறு. பண்டையகால மனிதர்களைபாருங்கள் என்பது வயதிலும் அனைத்துப்பல்லும் உறுதியாக இருக்கும். மொத்தம் உள்ள 32 பல்களில் ஒரு முறை எண்ணிப்பாருங்கள். 20லிருந்து 30க்குள் தான் இருக்கும். போனதுபோகட்டும்.இருப்பதையாவது எப்படி பாதுகாப்பது எனப்பார்ப்போம்.
முதலில் பற்களின் உபயோகங்களை பார்ப்போம்.
பற்களை வைத்து ஒருவரின் ஆரோக்கியம் நிர்ணயிக்கப்படுகிறது. உங்கள் புன்னகை உங்கள் ஆரோக்கியத்தோடு தொடர்புடையது மட்டுமல்ல உங்கள் அழகோடும் தொடர்புடையது. பற்கள் பளிச்சிட சத்தான உணவை சாப்பிடவேண்டும் என்று பரிந்துரைக்கின்றனர் மருத்துவர்கள்.
1)நார்ச்சத்து உணவுகள்
2)யோகர்டு
3)கிரீன் டீ
4)பெரிய வெங்காயம்
5)எள்
6)தண்ணீர்
7)பல் வலிமைக்கு ரெசிபியாக சில வகைகள்
8)சத்தான உணவு
9)பல் வலிக்கு பாட்டி வைத்தியம்
10)உணவு சம்மந்தமில்லாத ஒரு அவசியமான பின் குறிப்பு
1)நார்ச்சத்து உணவுகள்:-
உயர்தர நார்ச்சத்து நிறைந்த செலரி, ஆப்பிள், காரட்,போன்றவை பற்களில் உள்ள கிருமிகளுடன் போரிடுகிறது. இவை ஆரோக்கியமான உமிழ்நீரை உற்பத்தி செய்கின்றன. ஆராஞ்சு, திராட்சை போன்றவை வாய் ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவாக மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். வைட்டமின் சி சத்து நிறைந்த உணவுகளையும் உட்கொள்வது பற்களின் ஆரோக்கியத்திற்கும் அழகிற்கும் ஏற்றது. கிவி பழத்தில் வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது. இது பற்களின், ஈறுகளின் ஆரோக்கியத்திற்கு ஏற்றது.
2)பற்களை பாதுகாக்கும் யோகர்டு:-
பற்களின் இடுக்குகளில் பாக்டீரியா குடிபுகுந்தால் பற்கள் சொத்தையாகும், சுவாசம் ஆரோக்கியமாக இருக்காது, வாய் துர்நாற்றம் வீசும். எனவே ஆரோக்கியமான பற்களுக்கு யோகர்டு சாப்பிடலாம். அதில் உள்ள கால்சியல் பல் சொத்தையை தடுக்கும்.
3)கிரீன் டீ:-
பச்சை தேயிலை எனப்படும் கிரீன் டீ பருகுவது பற்களில் அசுத்த பாக்டீரியாக்கள் தங்குவதை தடுக்கும். அதேபோல் சீஸ் பற்களுக்கு அவசியமானது. இதில் உள்ள வைட்டமின் டி, கால்சியம் பற்களின் ஆரோக்கியத்திற்கும் அழகிற்கும் ஏற்றது. பிஹெச் மதிப்பை சமநிலையில் வைக்க உதவும்.
4)பெரிய வெங்காயம்
பற்கள் முத்துப்போல பளிச்சிட பெரிய வெங்காயத்தை பச்சையாக சாப்பிடலாம். இது பாக்டீரியா எதிர்ப்பு பொருளாக செயல்படுகிறது. பாக்டீரியாக்களை கொல்கிறது. எலுமிச்சை ஜூஸ், ஆரஞ்சு ஜூஸ் பற்களை பருகுவதால் பற்கள் வெண்மையாகும். ஸ்ட்ராபெரி பழம் இயற்கையிலேயே பற்களை வெண்மையாக்கும் பழமாக திகழ்கிறது. நன்றாக கடித்து தின்றால் பற்கள் ஆரோக்கியமான வெண்மையுடன் பிரகாசிக்கும்.
5)வலிமை தரும் எள்:-
எள் பற்களின் சுத்தத்திற்கு சிறந்த உணவுப் பொருளாகும். நல்லெண்ணெயை வாயில் ஊற்றி ஆயில் புல்லிங் செய்வது பற்களின் வலிமைக்கு ஏற்றது. ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அடங்கிய உணவுகளை உட்கொள்வதும் பற்களுக்கு வலிமை தரும்.
6)தண்ணீர் குடிங்க:-
சரியான அளவு தண்ணீர் பருகுவதும் வாய், பற்களின் ஆரோக்கியத்திற்கு ஏற்றது. இது தேவையான அளவு உமிழ்நீரை சுரக்கச் செய்வதோடு பற்களில் சொத்தை ஏற்படாமல் தடுக்கிறது.
பாலக்கீரை சூப்: ஒரு கட்டு பாலக்கீரை, பெரிய வெங்காயம்- 1, தக்காளி- 1, பூண்டு-2 ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு டீ ஸ்பூன் அளவுக்கு சீரகம், மிளகு அரைத்துக் கொள்ளவும். குக்கரில் எண்ணெய் விட்டு தாளித்து தக்காளி, வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கி, சீரகம் - மிளகுத்தூள் சேர்க்கவும். இத்துடன் கீரை, மஞ்சள் தூள் மற்றும் சிறிதளவு தண்ணீர், உப்பு சேர்த்து குக்கரில் ஒரு விசில் நேரத்திற்கு வேக வைத்து, பின் கடைந்து சூப்பாக அருந்தலாம். இதில் வைட்டமின், மினரல் சத்துகள் உள்ளன.
7) வலிமைக்குரெசிபி
வெண்டை பிரை:-வெங்காயம், தக்காளி, ஒரு டேபிள் ஸ்பூன் பூண் டுத் துருவல் ஆகியவற்றை எண் ணெயில் வதக்கி மசித்துக் கொள் ளவும். இத்துடன் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து பேஸ்ட் போல பிசைந்து, 10 வெண்டைக்காயை நீளவாக்கில் நறுக்கி உள்ளே ஸ்டப் செய்யவும். தோசை கல்லில் எண்ணெய் விட்டு மிதமான தீயில் வெண்டைக்காய் பிரை செய்யலாம். இதில் வைட்டமின் சி சத்து உள்ளது.
காலிபிளவர் கட்லட்:-ஒரு காலிபிளவர் பூ கட் செய்து உப்புத் தண்ணீரில் போட்டு சுத்தம் செய்யவும். அரை கப் முட்டைக்கோசை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இவற்றை எண்ணெயில் வதக்கிக் கொள்ளவும். இத்துடன் தேவையான அளவு உப்பு, கரம்மசாலாத் தூள், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி உருண்டை பிடித்துக் கொள்ளவும். கான்பிளவர் மாவு, ரொட்டித்தூள் ஆகியவற்றில் உருட்டி தட்டி தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு வேகவைத்து எடுக்கவும். இந்த கட்லட்டில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது.
8)சத்தான உணவு:-
பொதுவாக 30 வயதுக்கு மேல் பல காரணங் களால் பல் பாதிப்பு அதிகரிக்கிறது. மேலும் சிறு வயது முதல் கால்சியம், அயோடின் மற்றும் பாஸ்பரஸ் ஆகிய சத்துக் குறைபாட்டினால் பற்கள் விரைவில் வலுவிழக்கின்றன. இவற்றை தடுக்க பழங்கள், காய்கறிகள் அதிகம் சாப்பிட வேண்டும். வைட்டமின்-சி சத்து அதிகம் உள்ள ஆரஞ்சு, சாத்துக்குடி , எலுமிச்சை, பப்பாளி, திராட்சை இவ ற்றில் ஏதாவது ஒன்றை தினமும் சாப்பிட வேண்டும். கேழ்வரகு, மீன், கீரை வகைகள், முட்டைக்கோஸ், காளிபிளவர், அடிக்கடி சேர்க்கவும். தினமும் இரண்டு டம்ளர் பால் அவசியம். தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். இனிப்பு, உப்பு, காரம் குறைத்து கொள்ளவும். சூடாகவும், காரமாக சாப்பிடுவதை தவிர்க்கவும். அப்படி சாப்பிட நேர்ந்தால் உப்புத் தண்ணீரால் வாய் கொப்பளிக்கவும். இனிப்பு சாப்பிட்ட பின் கண்டிப்பாக பிரஷ் செய்யவும். வயதாகும் போது எதிர்ப்பு சக்தி குறைபாட்டின் காரணமாகவே பல் தேய்மானம் மற்றும் பல் இழப்புகள் ஏற்படும். பல்லை சுத்தமாகப் பராமரித்தல், சத்தான உணவு ஆகியவையே பல் ஆரோக்யத்தை பாதுகாக்க உதவும், என்கிறார் உணவு ஆலோசகர் சங்கீதா.
9)பாட்டி வைத்தியம்
* பூண்டு, வெங்காயத்தை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
* ஆலமர விழுதுகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி காய வைக்கவும். இத்துடன் படிகாரம் சேர்த்து அரை த்து வைத்து கொண்டு, அதில் பல் துலக்கினால் பல் தொடர்பான பாதிப் புகள் குறையும்.
* ஆலமர பட்டையில் கஷாயம் வைத்து வாய் கொப்பளித்தால் பல் வலி குறையும்.
* நல்லெண்ணெய் 20 மிலி அளவுக்கு வாயில் ஊற்றி அடக்கி இருபது நிமிடம் கழித்து வாய் கொப்பளித்து துப்பினால் வாயில் ஏற்படும் கிருமித் தொற்று குணமாகும்.
* கிராம்பு, கொட்டைப்பாக்கு இரண்டையும் சம அளவில் எடுத்து பொடி செய்து பல் துலக்கினால் பல்வலி குணமாகும். ஈறுகள் பலப்படும்.
* கொய்யா இலையை மென்று தின்று வெந்நீரில் வாய் கொப்பளித்தால் பல் கூச்சம் விலகும்.
* கொய்யா இலை, கருவேலம்பட்டை, உப்பு மூன்றையும் சம அளவில் எடுத்து பொடி செய்து பல் துலக்கி வந்தால் பல் வலி உள்ளிட்ட அனைத்து நோய்களும் விலகும்
*உணவு வேளையில் நீங்கள் உண்ண வேண்டிய கடைசிப்பொருள் நறுக்கப்பட்ட பச்சைக்காய்கறிகளாகவோ அல்லது பழங்களாகவோ இருக்கட்டும். மறந்தும் கூட இனிப்பு பொருட்களை சாப்பிட வேண்டாம். சாப்பிடும் போது ருசியாக இருக்கும் உணவு, வாயில் சிறிது நேரம் தங்கி விட்டால்,துர்றாற்றத்திற்கு காரணமாக அமைகிறது.
*உணவு உட்கொண்டு முடித்தவுடன் வாயை கொப்பளித்தல் வேண்டும்.
10)உணவு சம்மந்தமில்லாத ஒரு அவசியமான பின் குறிப்பு :-
காலையில் ஒருமுறை இரவில் ஒருமுறை பல் துலக்கி நாக்கை சுத்தம் செய்ய வேண்டும்.