Thursday, December 6, 2012

உணவின் மூலம் மூட்டு மற்றும் முதுகு வலியை வராமல் தடுப்பது எப்படி?



உணவின் மூலம் மூட்டு மற்றும் முதுகு வலியை வராமல் தடுப்பது எப்படி?

சாப்பாட்டை (உணவை)அடிப்படையாக வைத்து  மூட்டு,முதுகு  வலி வரக்காரணம் என்ன? எப்படி சாப்பிடுவதன் முலம் தடுக்கலாம் வந்து விட்டால் என்ன செய்வது என்ன உணவுகளை சாப்பிடுவது எப்படி சரிசெய்வது என்பதை முன்று பிரிவுகளாக பதிவிடுகிறேன் இதுவரையில் இல்லாத வகையில் முயற்சித்திருக்கிறேன் வாசகர்கள் தங்களின் கருத்துக்களை பதிவிடு மாறு கேட்டுக்கொள்கிறேன்
மாறிவரும் உணவு பழக்கவழக்க மாற்றத்தால் இப்போது எல்லாம் முப்பது வயதுலேயே மூட்டுவலி வந்து முட்டி பார்கிறது முதுகுவலி வந்து மோதிப்பார்கிறது "நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதற்கொப்ப"  வலி வந்து அவதி படுவதை விட வராமல் எப்படி தடுக்கலாம் என்பதனை முதலில் பார்போம் 

மூட்டு நமது முழங்கால்களில் மட்டும் இல்லை தோள்பட்டை, முழங்கை, முழங்கால், கழுத்து, இடுப்பு போன்ற அனைத்தும் மூட்டு வகைகள் தான்  
இதில் ஏற்படும்  வலியை பொதுவாக மூட்டு வாதம் என்கிறோம்.  இதில் நூற்றுக்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன அவற்றில் பெரும்பான்மையான இரண்டு வகைகளின் (காரணத்தை) மட்டும் பார்ப்போம்



1)மூட்டழற்சி:-(osteo arthritis):இது பெரும்பாலும் வயதானவர்களுக்கே வரும் இது பொதுவாக இடுப்பு மூட்டு, கால் மூட்டு, தோள்பட்டை, கழுத்து போன்ற பகுதிகளில் ஏற்படும்.
                                      
2)முடக்குவாதம்:-(rheumatoid arthritis): இது பத்து முதல் எந்த வயதினருக்கும் வரலாம். அதிகமாக விரல்கள்,மணிக்கட்டு,கால் போன்ற பகுதிகளையே தாக்கும். 

1)மூட்டு மற்றும் முதுகு வலி வருவதற்கான
காரணங்கள்
மூட்டு(எந்தவித)வலியானாலும் அதற்கு முக்கியமான காரணம் நரம்பு அழுத்தம் அல்லது  நரம்பு  தூண்டல் தான் எப்படி தேடிப்பார்தாலும் இதில் ஒரு காரணம் நிச்சயமாக இருக்கும்

1) தவறான உணவுப்பழக்கம்
2) அதிக அளவு காபி, டீ அருந்துதல்
3) அதிக அளவு  எண்ணெய் உணவுகள் சாப்பிடுதல்(ஆலிவ் எண்ணெய் மற்றும் மீன் 
     எண்ணெய் தவிர)
4) அதிக உப்பு சேர்த்தல்(எதுவும் அளவோடு இருப்பது நலமோடு இருப்பதற்கு சமம்)
5) அதிக சக்கரை சேர்த்த இனிப்புகள், பானங்கள் குடித்தல்
6) மது, புகை, போதை வஸ்துக்கள் மது, புகை, போதை வஸ்துக்கள்    
    உட்கொள்ளுதல் 
7) வாயுவு உணடாக்கும் உணவுகள் அதிகமாக சாப்பிடுதல்(மொச்சை, பட்டாணி, 
    தட்டைபயறு, உருளை)
8) வயிறு முட்ட உண்ணுவது


 
9) பதப்படுத்தப்பட்ட (டின்) உணவுகள் மற்றும் குளிர்பானங்கள்
10போதிய நீர் சத்து இல்லாதது
11) கால்சியம் சத்து குறைவாக இருப்பது

உணவு மட்டுமல்லாமல் மூட்டு மற்றும் முதுகேலும்பைபாதிக்கும்(ஐந்து) செயல்கள்

12) அதிக அதிக புணர்சி மற்றும் சுயஇன்பம் உணர்சியூடும் காம படங்களை 
      பார்ப்பது 

13) அதிக அதிக உடற்ப்பயிற்சி (எதுவும் அளவோடு இருப்பது நலமோடு இருப்பதற்கு   
       சமம்)
14) உடல் உழைப்பின்மை

15) தொடர்சியான தூக்கமின்மை,அதிக மனஅழுத்தம்,அதீத கோபம் 

















இனி விரிவாக காண்போம்

1தவறான உணவுப்பழக்கம்

*பணிசுமையின் காரணமாக நேரம் தவறி உணவு சாப்பிடுவது,
*எளிதில் ஜீரணமாகாத உணவுகளை உண்பது (குறிப்பாக இரவு வேளைகளில்), 

*கழுத்தளவுக்கு வயிறு முட்ட உண்பது,
சரியான நேரத்திற்கு சாப்பிடாமல் நேரம் கிடைக்கும் போது சாப்பிடுவது,   ஒரே நேரத்தில் அதிக வயறு முட்ட உண்ணுவது,  போன்றவை அஜீரணக் கோளாறு மற்றும் மலச்சிகளை உண்டாக்கிவிடும் மலச்சிகளினால் உண்டாகும் காற்று (வாயு) கீழ்நோக்கி சென்று மலவாய் வழியாக வெளியேறிவிடும் ஆனால்  சில சமையம் நாம் வெளியேற்றாமல் அடக்கி வைத்தால்அது பொங்கும்  போது மேல்நோக்கி சென்று தலையை அடைகிறது.  அங்கிருந்து பின்கழுத்து வழியாக கீழ் இறங்கி உடலின் அனைத்துப் பாகங்களுக்கும் வேகமாகச் செல்கிறது.  அப்போது கால் மூட்டுகளிலும், தசை நார்களிலும் செல்லும் வாய்வு அங்கேயே தங்கிவிடுகிறது.  இந்த வாய்வு நீராக (யூரிக் அமிலம்) மாறிவிடுகிறது .  இது மூட்டுக்களிலேயே தங்கி மூட்டுகளை வீங்கச் செய்கிறது என்கிறது ஆயுர்வேதம் .

இவையெல்லாம் அல்சர்மற்றும்  மலச்சிக்க வாயுவை உண்டாக்கி நரம்புகளை அழுத்தும். நரம்புகள் அழுதப்படுவதானால் மூட்டுக்களில் வலியுண்டாகும்

2) அதிய அளவு காபி, டீ அருந்துதல் 
 காபி, டீ நரம்புகளை உற்சாகபடுத்தும். நரம்புகள் தூண்டப்படும் எந்த ஒரு செயலாகினும் முட்டுகளை பாதிக்கும் (மேலும் காபி பித்தம் மற்றும் மலச்சிகளை ஏற்படுத்தும்)

3) அதிக அளவு எண்ணெய் உணவுகள் சாப்பிடுதல் (ஆலிவ் மற்றும் மீன் 
     எண்ணெய் விதிவிலக்கு)
எண்ணெய் உணவுகள் மலச்சிகளை ஏற்படுத்தும் மலசிக்கல் வாவுசிற்றதை உண்டாக்கி முட்டுகளில் வலியை உண்டாகும் (உடல்பருமனனும் போனஸ்)
(ஆலிவ் மற்றும் மீன் எண்ணெய் விதிவிலக்கு)

4) அதிக உப்பு சேர்த்தல்
உப்பு (சோடியம் குளோரைடு)  நம் உடம்பிற்கு மிகவும் அவசியமான ஒரு இயற்கை  கெமிக்கல் ஆகும். அதையே அளவிற்க்கதிகமாக  சாப்பிடும் போது சிறிது சிறிதாக நம் உடல் செல்களில் தங்கி செல்லை வீக்கமடைய வைக்கிறது இதே நிகழ்வு நம் மூட்டுகளில்  நடைபெறும் ம விங்கி நரம்புகளை அழுத்துகிறதுஅளவான உப்பு  வளமான வாழ்வு (BP. free)

5) அதிக சக்கரை சேர்த்த இனிப்புகள், பானங்கள் குடித்தல்
சக்கரை உருவாக்குவதற்காக சேர்க்கப்படும் கெமிக்கல்ஸ் கால்சியத்தை உடைத்து விடும் தன்மை கொண்டது இரத்தத்தில் உள்ள சக்கரை நரம்புகளை வீங்க செய்யும்

6) மது, புகை, போதை வஸ்துக்கள் மது, புகை, போதை வஸ்துக்கள் 
    உட்கொள்ளுதல்
எல்லா போதை வஸ்துக்களும் சிறுமூளையை தாக்கி நரம்பு மண்டலத்தை நிலைகுலைய செய்வதால் மிக விரைவில் மூட்டுவலியை கொண்டு  வந்துவிடுகிறது

7)வாயுவு உணடாக்கும்  உணவுகள் அதிகமாக சாப்பிடுதல் (உ-தா மொச்சை,பட்டாணி, தட்டைபயறு, உருளை)
பொதுவாக மலச்சிக்கல் இல்லாதவர்களுக்கும் இந்நோய் வரவே  வராது .வாயுவை உருவாகும் உணவுகள் வாயுவிற்கு முன் மலச்சிக்களை 
உண்டாக்கி விடும் என்பதால்  வாயுவை உணடாக்கும் உணவுகளை அடிக்கடி 
உண்பதை தவிர்த்துவிடுவது  நலம்
மூட்டுகளில் தங்கிய யூரிக் அமிலம், புரதம், கொழுப்புத் திரட்சி, சுண்ணாம்பு, பாஸ்பரஸ் படிவங்கள்


8) வயறு முட்ட உண்ணுவது
மேலும் நாம் சாப்பிடும் அதிக உணவு முதுகு தண்டு வட பகுதியில் அழுத்தத்தை ஏற்படுத்தி நாளடைவில் முதுகு தண்டு வட வரிசையில்  மாற்றத்தை உருவாகும் அவ்வாறு வளைந்த தொப்பை நிலையில் முதுகு எலும்புகளுக்கிடையில் மாட்டிய நரம்புகள் முதுகுவலியை கொடுக்கும் உணவு உண்ணும் முன் வயிற்றை நான்கு பாகமாக பிரித்துக்கொள்ள வேண்டும் இரண்டு பாகம் உணவு ஒரு பாகம்  காற்றுக்காக  (காலியாக) விடவேண்டும்

9) பதப்படுத்தப்பட்ட (டின்) உணவுகள் மற்றும் குளிர்பானங்கள்
பதப்படுத்திய உணவுகள் இரசாயன குளிர்பானங்கள் எலும்புகளை உருக்கி சிதைத்து விடுகின்றன.கால்சிய குறைபாட்டை ஏற்படுத்துகின்றன மற்றும் 
செயற்கையாக பதப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படும் உணவு பண்டங்கள் விட்டமின்கள், தாதுக்கள், என்ஸைம்கள் ஆகியவை இல்லாதிருப்பதால் ஆரோக்கியமற்ற மாவுச் சத்துக்களாக கருதப்படுகின்றன. மேலும் இந்த பதப்படுத்தப் பட்ட உணவுப் பண்டங்கள் நம்முடைய ரத்த ஓட்டத்தில் குளுக்கோஸ் அளவை வேகமாக ஏற்றுகிறது (உதாரணமாக பாட்டில் அடைக்கப்பட்ட பழச்சாறுகள், உருளைக்கிழங்கு வறுவல்கள், வெள்ளை ரொட்டி, மற்றும் தக்காளி கெட்சப் ).

10) கால்சியம் சத்து குறைவாக இருப்பது
கால்சியத்துகு சமந்தம் இல்லாத சாப்பிடுவது வறட்டு சுட்ட ரொட்டி போன்ற  (அதாங்க பீசா பர்கர் அப்புறம் கண்டஎழவும் )உணவுகளை பாஸ்ட்புட் என்ற பெயரில்  பாஸ்ட்புட்டா அது சுலோ(பாய்சன்)புட் 

11) போதிய நீர் சத்து இல்லாதது
தினமும் இரண்டு லிட்டருக்கு குறைவான அளவு நீர்அருந்துவது 

உணவு மட்டுமல்லாமல் மூட்டு மற்றும் முதுகெலும்பை பாதிக்கும்(ஐந்துசெயல்கள்


12)அளவுகடந்த புணர்சி மற்றும் சுயஇன்பம் உணர்சயூட்டும் காம  
      படங்களைப் பார்ப்பது

அளவுகடந்த விந்து வெளியேற்றம் (புணர்சி மற்றும் சுயஇன்பம்) மூட்டில் உள்ள பசையை குறைக்க வாய்ப்பு இருக்கிறது மேலும் நரம்புகளை விடைக்கசெய்து அழுத்துகிறது நாளைடைவில் மூட்டு தேய்மானத்தை உருவாக்கும்.
புணர்சி ,சுய இன்பம் உண்டாக்கும் கிளர்சியாவது ஒரு சிலநிமிடங்களில் முடிந்து விடும் ஆனால் உணர்சியூடும் காம படங்கள் நம்மை ஒவோர்ர் வினாடியும் கிளர்சி அடைய செய்யும் கிளர்சியினால் நரம்புகள் அழுத்தப்படும்.

நரம்புத்தளர்சி மற்றும் முட்டு வலி மற்றும் முதுகு வலியை உண்டாகும்

13)அதிக உடற்பயிற்சி (எதுவும் அளவோடு இருப்பது நலமோடு 
      இருப்பதற்கு சமம்)

உடற்ப்பயிற்சி முட்டுக்கு நல்லதுதான் ஆனால் அதுவே அளவிற்கு மிஞ்சினால் மூட்டு தேய்மானதை உருவாக்கும். முக்கியமாக மூட்டுக்கு அதிக அழுத்தம் தரக்கூடிய உடற்ப்பயிற்சி மற்றும் வேலைகளை செய்வதை தவிர்க்க வேண்டும் உதாரணத்துக்கு அதிக பளு தூக்குதல், உடலை உலுக்கும் பயணம் போன்றவை

14) உடல் உழைப்பின்மை(சோம்பேறித்தனம்)

 பொதுவாக நம் பழக்க வழக்கதிற்குத் தகுந்தாற்போல் தான் நமது உடலின் நிலையும் மூளையின்  செயல்பாடும் அமைகின்றன முழங்காலில்  எலும்புகளுக்கிடையில் உள்ள கார்டிலேஜ்  ஜவ்வு தான் முழங்கால் அசையும் பொழுது மூட்டு தேய்ந்து போகாமல் பாதுகாக்கிறது. நமது சோம்பேறித்தனம் சிறு மூளையை மட்டுப்படுத்தி இந்த ஜவ்வுக்கு செல்லும் நரம்புகளின்  வேலையை குறைக்கிறது.பின்னர் ஜவ்வு தேய்ந்து  மூட்டு மற்றும் முதுகு வலியை உண்டாக்கிவிடும்

15) தொடர்சியான தூக்கமின்மை,அதிக மனஅழுத்தம்,அதீத கோபம்  
தூக்கமின்மை,மனஅழுத்தம்,கோபம் போன்றவை நமது சிறு மூளையை 
பாதித்து பிட்யூட்டரி (நியூரோஹைப்போபைசிஸ்) கட்டுப்பாடு இழக்கச் செய்யும்  உணர்சிகளை அதிகமாக்கி முட்டு தேய்மானத்தை ஏற்ப்படுத்தும்
16) அதிக உடல் எடை
அதிக உடல் எடை எல்லாவிதத்திலும் ஆபத்துதான். உடல் உயரதிற்கு தகுந்த எடையை விட அதிக எடை நமது முட்டியை அழுத்தும் ஜவ்வு நசுங்கி பிறகு என்ன முட்டு வலியாகி விடும்

பாகம் 1)மூட்டு வலி  வருவதாற்கான காரணம் என்ன?

பாகம் 2) நமது சாப்பாட்டு முறைகளை சரி செய்வதன் மூலம் எப்படி    
                  தடுக்கலாம் ?

பாகம் 3)வந்து விட்டால் என்ன செய்வது ?

நமது சாப்பாடு முறைகளை சரி செய்வதன் மூலம் மூட்டு வலி வராமல் தடுப்பது எப்படி? பாகம் 2  10/12/12 அன்று வெளியாகும்

2 comments:

  1. வீட்டிலிருந்தபடியே தையல் கலை கற்று கொள்ள எங்கள் இணைய தளத்தை பார்வை இடவும் .இணைய முகவரி http://jayamdesigner.blogspot.in/ .இந்த தகவலை உங்கள் நண்பர்களுடன் share செய்யவும் . நன்றி

    ReplyDelete
  2. இயற்கை வைத்தியம்
    எல்லா வகையான மூட்டு வலிகளுக்கும் ..
    தொடர்புக்கு:-
    9843034129

    ReplyDelete