இதயத்தை பாதுகாக்க இதமான வழிகள் 13
இந்தியாவில் புற்றுநோயால் மரணமடைபவர்களை விடவும், இதயநோயால் மரணமடைபவர்கள்தான் அதிகம் பேர்.கடந்த பத்து ஆண்டுகளில் இதயநோயினால் பாதிக்கப்பட்ட
நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் மாறிவரும் உணவுப் பழக்கமே இன்று பெரும்பாலும் வரும் இதய நோயான மாரடைப்பு
ஏற்பட பல காரணங்கள் இருந்தாலும். அதில் உண்ணும் உணவுகள்
முலமாக ஏற்படும் மாரடைப்பை எப்படி தடுப்பது என்பதனை மட்டும் பார்போம் (ஏன் என்றால் நமது சுவைஇன்பம் பிளாக் ஸ்ப்பாட்
டார்ட் இன் (http://suvaiinbam.blogspot.in/) இல் உணவு சம்மந்தப்பட்ட விசங்களை மட்டும் தான்
பார்த்து வருகிறோம்) ஏனெனில் உண்ணும்
உணவுகளில் ஒரு சில உணவுகள் இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. மேலும் எந்த உணவுகளால்
இதயத்திற்கு பாதிப்பு ஏற்படுகின்றது
என்றும் மருத்துவர்கள் பட்டியலிட்டுள்ளனர். அதிலும் ஏற்கனவே இதயத்தில் பாதிப்பு
இருப்பவர்கள், அத்தகைய
இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் உணவுகளை உண்ணாமல் தவிர்ப்பது நல்லது.
மேலும் ஆரோக்கியமாக நீண்ட நாட்கள் வாழ வேண்டுமென்றால், இப்போது கூறும் உணவுகளை
அதிகம் உண்ணாமலும், உடலில் கலோரிகள் 2000
மேல் இல்லாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். அதிலும்
டயட்டில் ஆரோக்கியமான உணவுகளை மட்டும் சேர்த்து வர வேண்டும்.இப்போது
எந்த உணவுகள் முலமாக மாரடைப்பு ஏற்படுடும் என்று பார்ப்போமா!!!
http://suvaiinbam.blogspot.in/
மாரடைப்பை ஏற்படுத்தும் உணவுகள்:-(13)
மாரடைப்பை ஏற்படுத்தும் உணவுகள்:-(13)
1)பாஸ்ட் புட் சைனீஸ் உணவுகள்மற்றும்டின்களில் அடைக்கப்பட்ட உணவு
2)ப்ரகோலி காலிபிளவர் (cauliflower broccoli) சாப்புடுங்க
3)சீஸ் மற்றும் வறுத்த உணவுகள்
4)குளிர்பானகள்
5)உணவு
உண்டவுடன் ஜில் தண்ணீரை தொடாதிர்
6)சர்க்கரை
7)அதிகமான கிளிசரின் உணவுகள்
8)சாலையோர உணவகங்கள், உஷார்
9)ஆல்கஹால்
10)அளவான
உப்பு
11)ரத்த சோகை(சாப்புடாம இருப்பதினாலேதனே வருது)
12)கொழுப்புச் சத்து(இதுவும் சாப்பாட்டுனாலதனே உண்டாகுது)
13)வயிறு புடைக்க சாப்பிடாதிர்
---------------------------------------------------------------------
1) டின்களில் அடைக்கப்பட்ட உணவுகள், பாஸ்ட் புட் மற்றும் சைனீஸ்
உணவுகள்:-
சைனீஸ் உணவுகளில் அதிகமான அளவில் இதயத்திற்கு
தீங்கு விளைவிக்கும் பொருட்களை சேர்க்கின்றனர். எனவே சைனீஸ் உணவுகளை அதிகம் சாப்பிட கூடாது.அதிலும் அந்த உணவுகளில்
அஜினோமோட்டோ மற்றும் சோயா சாஸ் என்னும் இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் பொருட்களையும்
சேர்க்கின்றனர். மேலும் உடலில் 1500
மில்லி கிராம் சோடியம் இருப்பது இதயத்திற்கு பெரும் பாதிப்பானது.
அத்தகைய அளவு சோயா சாஸில் இருக்கிறது. சைனீஸ் உணவுகள் அதிக சுவையுடன்
இருப்பதற்கு அந்த சோயா சாஸ் தான் காரணம். ஏனெனில் அதனை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துகின்றனர். இதனால் உடல்
ஆரோக்கியம் பாதிப்பதோடு, இதய நோயும் ஏற்படுகிறது."·பாஸ்ட் புட்" சாப்பாடு, டின்களில் அடைக்கப்பட்ட உணவு ஆகிய இரண்டுமே உங்கள் பாக்கெட்டுக்கும் (பணம்)
உங்கள் இதயத்துக்கும் நல்லதல்ல.
-------------------------------------------------------------
2)(cauliflowerbroccoli) ப்ரகோலி காலிபிளவர் சாப்புடுங்க
மார்பகப் புற்றுநோயை ஏற்படுத்தும் ஸ்டெம் செல் வளர்ச்சியை ‘ப்ரகோலி’ காலிபிளவர் வகை உணவு தடுக்கும்
என்று அமெரிக்க ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.
cauliflower broccoli
-------------------------------------------
3)சீஸ் மற்றும் வறுத்த உணவுகள்: -
பசி எடுக்கும் போது, பசியில் வாசனை விசும் உணவுகள் கண்களுக்கு கவர்சியான உணவுகள் என்று தான் சாப்பிடத் தோன்றும்.ஆனால் சீஸ் அதிகம் பயன்படுத்தும் உணவுகள், எண்ணெயில் வறுத்த உணவுகள் சாப்பிட்டால், அதில் உள்ள கெட்ட கொழுப்புக்கள், உடலில் சேர்ந்து இரத்தத்தில் கொலஸ்ட்ராலை அதிகரித்துவிடும். இதனால் தமனிகளில் கொழுப்புக்கள் சேர்ந்து அடைப்புகளை ஏற்படுத்தும். அதுமட்டுமல்லாமல், வேறு பல இதய நோய்கள், ஏன் மாரடைப்பு கூட ஏற்படும் வாய்ப்புள்ளது. ஆகவே
-------------------------------------
4)குளிர்பானகள் :-
குளிர்பானகளை( அக்கா மாலா, கப்சி, போன்ற )தினமும்
குடிப்பவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என அமெரிக்காவை
சேர்ந்த ஹார்வர்டு பல்கலைக்கழகம் கடந்த 22 ஆண்டுகளாக நடத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.குளிர்பானத்தில்
கலக்கப்படும் சில ரசாயன கலவைகள்
இதயத்துக்கு தீங்கு விளைவிக்கும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.
-----------------------------------------------------------------------------
5)உணவு உண்டவுடன் ஜில் கூல் தண்ணீரை தொடாதிர்:-
உணவு உண்டவுடன்
குளிர்ச்சியான தண்ணீரை குடித்தால், அது நாம்
சாப்பிட்ட உணவில் உள்ள எண்ணெய்த் துகள்களை கெட்டியாக்கி
விடுகிறது. இதனால் சாப்பிட்ட உணவு ஜீரணம் ஆவதில்
சிக்கல் ஏற்படுகிறது.உடலில் இருக்கும்
கொழுப்பின் அளவு அதிகரிக்கவும் அது காரணமாகி விடுகிறது. இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் இதயம், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பல பிரச்சினைகள் வரலாம் என்றும் மருத்துவர்கள்
எச்சரிக்கின்றனர்.பொதுவாகவே ஜில் தண்ணீர் அருந்துவதை தவிர்த்துவிடுங்கள், அதற்கு பதிலாக வெதுவெதுப்பான நீர் அருந்துங்கள் என்று
அறிவுறுத்தியுள்ளனர் மருத்துவர்கள்.
-------------------------------------------------------------
6)இனிப்பு(சர்க்கரை): -
சர்க்கரை அதிகமாக உள்ள உணவுகளை உண்பதும் இதயத்திற்கு சரியானதல்ல.
ஏனெனில் அவை இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரித்து, நீரிழிவை ஏற்படுத்தும். மேலும் இதில் உள்ள
பொருட்களும் மாரடைப்பிற்கு வழிவகுக்கும்
---------------------------------------------------------------------
7)கிளிசரின் உணவுகள்: -
-----------------------------------------------------------------
8)சாலையோர உணவகங்கள், உஷார்:-
8)சாலையோர உணவகங்கள், உஷார்:-
சாலையோர உணவகங்களில் சுகாதாரமற்ற முறையில் வடை, பஜ்ஜி, போண்டா, இட்லி, தோசை, பிரியாணி, புரோட்டா, இறைச்சி, மீன் உள்ளிட்ட அனைத்து உணவுகளையும் விற்பனைசெய்கிறார்கள்.எண்ணெயைத் திரும்பத்
திரும்பக் கொதிக்கவைத்து உபயோகிக்கின்றனர் எண்ணெயைத் திரும்பத் திரும்பக் கொதிக்க வைக்கும் போது டிரான்ஸ் கொழுப்பு அமிலம்
உற்பத்தியாகிறது.இதுதான் இருக்கின்றகொழுப்புகளிலேயே மிகவும் கொடூரமானது. இதயத்தமனிக் குழாய்களை நேரடியாகவும், விரைவாகவும்
அடைத்து, மாரடைப்பை உடனடியாக வரவழைக்கும் ஆபத்து
------------------------------------------------------------
9)ஆல்கஹால்:-
ஆல்கஹாலில் ஒன்றான ரெட் ஒயினை அவ்வப்போது ஒரு டம்ளர் சாப்பிட்டால், மாரடைப்பை தடுக்கலாம் என்று பல ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதையே அதிகமாக சாப்பிட்டால், அதற்கான எதிர்பலன் தான் கிடைக்கும். ஏனெனில் பொதுவாக மாரடைப்பிற்கு ஆல்கஹாலும் ஒரு பெரும் காரணம். அது இதயத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே தான், அதிக அளவில் ஆல்கஹால் அருந்துபவருக்கு விரைவில் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது. அதுமட்டுமில்லாமல், அவை மாரடைப்பிற்கும் வழிவகுக்கிறது.
10)அளவான
உப்பு :-
உணவில் உப்பு பயன்படுத்துவதைக் குறைத்தால் அது பல்வேறு உடல் பிரச்னைகளை ஏற்படுத்தி இறுதியில் இருதய நோயை ஏற்படுத்தும் என்று மருத்துவ ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.பொதுவாக உப்பை அதிகம் உட்கொண்டால் அது உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தி மாரடைப்பை உருவாக்கும் என இதுநாள் வரை கருதப்பட்டது.ஆனால் 40,000 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட 67 ஆய்வு முடிவின்படி உப்பைக் குறைத்துக் கொள்வோரின் உடலில் 2.5 சதவீதம் கொழுப்பு அதிகரிப்பதாகத் தெரியவந்துள்ளது என்று லண்டனில் வெளியாகும் நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.அளவான உப்பு பயன்படுத்துங்கள்
---------------------------------------
11)ரத்த
சோகை(சாப்புடாம
இருப்பதினாலேதனே வருது):-
இரும்பு சத்து இல்லாத உணவுகளை உண்ணும் பழக்க உடையவராக இருந்தால், இரும்பு சத்து அதிகம் இருக்கும் உணவுகளை அவர் சாப்பிட வேண்டும், கீரை, பீன்ஸ், பருப்பு வகைகள், சோயா பீன்ஸ், உலர் திராட்சை ஆகியவற்றில் இரும்பு சத்து அதிகம்
இருக்கிறது.வலிநிவாரணி, ,வீக்கத்தை குறைக்கும் மருந்துகளாலும், ரத்த சோகை ஏற்படலாம் என்பதால் அவற்றிற்கான மூல காரணத்தை சரி செய்ய வேண்டும்.
இத்தகைய ரத்த சோகையை போக்க குழந்தைகளுக்கு உணவில் அதிக இரும்பு சத்துள்ள கீரைகளை முருங்கைக்கீரை, அரைக் கீரை, ஆரைக்கீரை, புதினா, கொத்த மல்லி, கறிவேப்பலை, அகத்திக் கீரை, பொன்னாங் கண்ணி கீரை போன்ற கீரைகளையும், திராட்சை, பேரீட்சை, உலர்ந்த திராட்சை பப்பாளி, அத்திப் பழம், மாம்பழம், பலா பழம், சப்போட்டா ஆப்பிள், நெல்லிக்கனி போன்ற பழங்களையும் தினமும், கொடுத்து வருவது நல்லது. இதனால் ரத்தம் விருத்தி அடைந்து ரத்த சோகை நீங்கும். மாரடைப்பு பயமும் போகும்
-------------------------------------------------------------------
12)கொழுப்புச் சத்து(இதுவும் சாப்பாட்டுனால தானே உண்டாகுது):-
12)கொழுப்புச் சத்து(இதுவும் சாப்பாட்டுனால தானே உண்டாகுது):-
கொழுப்புச் சத்து அதிகம் காணப்படுவது ஆபத்து என்றாலும் நமது உடலுக்கு தேவையான அளவுகொழுப்புச் சத்தை பராமரிப்பதும் அவசியம் ஆகும். நாம் உண்ணும் உணவில் உள்ள வைட்டமின்கள் ஏ,டி,இ,கே போன்றவைகள் கொழுப்பில் கரைக்கப்பட்டே உடலுக்குள் செலுத்தப்படுகிறது. மொத்த கொழுப்பின் அளவு (LDL)200-க்குள் இருக்க வேண்டும். இந்த அளவில் இருந்தால் இதய நோய்கள் தாக்குவதற்கான வாய்ப்பு குறைவாக இருக்கும். 200-லிருந்து 239 வரை கொழுப்பின் அளவுஇருக்கும்பட்சத்தில் இதயநோய் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது என்று எடுத்துக் கொள்ளலாம். 240-க்கும் மேலாக இருந்தால் இவர்களுக்கு இதய நோய்க்கான ஆபத்து அதிகமாகும்.உயர் அடர்வு கொழுப்பு (HDL)40-க்கும் குறைவாக இருந்தாலும் ஆபத்து ஆகும்.(அதிகமா இருந்தா குறைசிகங்க கம்மியா இருந்தா நல்லா சாப்புடுங்க)
கொழுப்பை குறைக்கும் உணவுகள்,பூண்டு,இஞ்சி,வெங்காயம்(குறிப்பாக சின்ன வெங்காயம்),சிவப்பு அரிசி,நிலக் கடலை,லவங்க மசாலா பட்டை,மீன்(குறிப்பாக கவளை மீன் எனப்படும் சாலை மீன்),மஞ்சள்,கருப்பு திராட்சை,கொள்ளு,சோயா,கோதுமை போன்ற தாணியங்களும் கொழுப்பை குறைக்கிறது,
கொழுப்பை அதிகரிக்கும் உணவுகள்:-எண்ணெய், நெய், டால்டா, தேங்காய் எண்ணெய், மூளைக் கறி,நண்டு, ஈரல் முதலிய அசைவ உணவு வகைகள், ஊறுகாய், பாலாடை, பால், பால்கோவா, முந்திரி,தேங்காய், வேர்க்கடலை உள்ளிட்டவற்றில் கொழுப்புச் சத்து அதிகம்.
13)வயிறு புடைக்க சாப்பிடாதிர்:-
வயிறு புடைக்க உண்பதினால் ரியாக்த்வ் ஆக்சிஜன் உருவாகிறது
அவைஇரத்ததமணிகளில் எரிச்சலை ஏற்படுத்தும் இவை நாளடைவில் மாரடைப்பை உண்டாக்கும். அரை வயிறு சாப்பாடு கால் வயிறு தண்ணிருக்கு கால் வயிறு காற்றுக்கு என உணவை பிரித்து உண்ணவேண்டும்
இருதய நோயாளிகளுக்கான உணவு வகைகள்:-
சாப்பிடக்கூடியவை :
மஞ்சள்,வெண்ணெய் எடுத்த மோர், தக்காளி பழரசம், கிழங்கு வகை தவிர்த்த காய்கறிகள் கூட்டு, சாம்பார், ரசம், மோர், ஆடை எ டுத்த
பால், இட்லி, தோசை (எண்ணை
குறைவாக விட்டு) வெண் பொங்கல், இடியாப்பம், புட்டு, ஆப்பம், ஆரஞ்சுச்சாறு, பயறுவகை (பாசிப்பயறு) மாமிசமே......சாப்புடக்குடாதுன்னு சொல்லங்க கொஞ்சமா மாமிசம் ஒக்கே, சிறிய மீன்
வகைகள்.
சாப்பிடக்கூடாத உணவுகள் :
சீஸ், சிப்ஸ், பிரன்ச் பிரைஸ், பீட்சா,காபி, டீ, முட்டை மஞ்சள் கரு, வெண்ணெய், நெய், டால்டா, தேங்காய்ப் பொருட்கள், மசாலா வகைகள், ஈரல், மூளை, கிட்னி, முந்திரிப் பருப்பு, பேக்கரி உணவுகள்.பாலில் கொழுப்பு அதிகம்
உணவையும்
தாண்டி வாயினால் செயக்கூடிய ஒரு விஷயம் புகை பிடித்தல்
புகைபிடித்தல் என்பது நாம் கட்டுப்படுத்தக்
கூடியது. 45 வயதுக்குட்பட்ட
ஆண்களுக்கு வரும் மாரடைப்புகளில், 80 சதவீதம்
புகைபிடிப்பவருக்கே வருகிறது. புகை பிடிக்காதோரை ஒப்பிடுகையில், புகை
பிடிப்போருக்கு மாரடைப்பு வரும் வாய்ப்பு இரண்டிலிருந்து மூன்று மடங்கு
அதிகரிக்கிறது.நிக்கோடினும், இருதய ரத்தக்குழாயும்:ரத்தநாளங்களில் அடைப்பும்:கார்பன்
மோனாக்சைடு, ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களில் உள்ள ஆக்சிஜனை
விலக்கிவிட்டு, அந்த இடத்தில் தான் போய் அமர்ந்து கொள்கிறது.
இதனால் உடலில் ஆக்சிஜன் அளவு குறைகிறது. சரியான அளவு ஆக்சிஜன் கிடைக்க பெறாததால், இருதயமும், மற்ற
உறுப்புகளும் எளிதில் சோர்வடைகின்றன
ஆகவே மேற்கூறிய உணவுகளை தவிர்த்து, ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, இதயமும் ஆரோக்கியமானமாக இருக்கும்.
இந்த பதிவை எழுதுவதற்கு பதிமூன்று மணிநேரம் ஆகிவிட்டது எனது 13மணி நேர உழைப்பை மதித்து இந்த பதிவை காப்பிபேஸ்ட் பண்ணுபவர்கள் எனது வெப் url http://suvaiinbam.blogspot.in/ யும் சேர்த்து போட்டு உதவுங்கள்
மேலும் இந்த பதிவு உபயோகமாக இருக்கிறது என்று நினைத்தால் வலைதளம் மற்றும் சமூக வலைதளத்தில் பகிரவும் நன்றி
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரரே
ReplyDeleteஉங்கள் பிளக்கை இன்றுதான் பார்க்கிறேன் பேஸ்புக்கில் மட்டும்தான் எழுதுகிறீர்கள் என்று நினைத்தேன்
மிக பயனுள்ள பகிர்வு