Monday, October 22, 2012

தாய்பால் கொடுப்பதனால் இருவருக்கும் நன்மைகள் என்ன?





தாய்பால் கொடுப்பதனால் இருவருக்கும் நன்மைகள் என்ன?

உலகத்தில்  இடத்துக்கு இடம் மாறுபட்ட உணவுகளை உட்கொள்கிறோம் . (கோதுமை , அரிசி ,கிழங்கு) ஆனால் உலகம் முழுவதும் ஒரு மனதாக எல்லேரும் ஏற்றுக்கொண்டு கொண்டு உட்கொள்ளும் ஒரே உணவு தாய் குழந்தைக்கு ஊட்டும் தாய் பால் மட்டும் தான். அது நிச்சயமாக அதிசய உணவு. நமது இந்திய சகோதரிகளை கருத்தில் கொண்டு மனம் வெதும்பி இந்த பதிவை எழுதுகிறேன் திருமணமான எல்லேரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் இது.
தாய் பால்எப்படி உருவாகிறது தெரியுமா?
அம்மாவின் மார்பகத்தில் குழந்தை வாய் வைக்கும்போது,தாயின்மூளையில் உள்ள ப்ரோலேக்டின் (Prolactin) என்கிற ஹார்மோன் தூண்டப்பட்டு, ரத்தம் பாலாக மாற உதவி செய்கிறது. ஆக்சிடோசின் (Oxytocin) என்கிற மற்றொரு ஹார்மோன் சுரந்து மார்பகத்தில் உள்ள குழாய்கள் (Lactiferous ducts) வழியாக தாய்ப்பால் வெளிவருகிறது. 

மேலை நாடுகளின் பெரும்பாலான பெண்கள், குழந்தைகளுக்கு தாய்ப்பால் தர விரும்புவதில்லை.இதேபோல் இந்தியாவில் உள்ள இளம் தாய்மார்களும் உண்மை புரியாமல் அழகு கெட்டுவிடும் என்று நினைத்துக் கொண்டு குழந்தைகளுக்கு தாய்ப்பால் தருவதை சிலவாரங்களிலேயே நிறுத்தி விடுகின்றனர் என்பது வேதனைக்குறிய விஷயம்.

தாய்ப்பால் அளிப்பது வரம்.அதற்குக் கொடுப்பினை வேண்டும். எத்தனையோ பெண்கள் குழந்தை இல்லாமையால் வருத்தப் பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் குழந்தை பெறும் வரம் பெற்றவர்கள் அந்தப்பேற்றின் மகத்துவம் தெரியாமல் அதை அலட்சியப் படுத்துகின்றனர்.
குழந்தைகளுக்கு 1வருடம்  முதல்  2வருடம் வரை கண்டிப்பாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும். ஏனெனில் தாய்ப்பாலுக்கு நிகர் வேறு உணவில்லை. ஒரு தாய் அன்போடு குழந்தைக்கு பால் தரும் போது முன்று வகையான நன்மைகள் ஏற்படுகின்றன.1 )தாய்க்கு பல நன்மைகளும் 2 )குழந்தைகு பல நன்மைகளும் 3 )இருவருக்கும் சேர்த்து பல நன்மைகளும் ஏற்படுகின்றன.


1)தாய்க்கு ஏற்படும் நன்மைகள்
1 )மார்பகப் புற்று நோயிலிருந்தும் பாதுகாப்பு.
2 )இது ஒரு இயற்கையான கருத்தடைமுறையாகும்.
3 )கர்பப்பை சூலக புற்று நோயிலிருந்தும் பாதுகாப்பு.
4 )உயர் ரத்த அழுத்த நோய்யில் இருந்து பாதுகாப்பு.
5 )இதய நோய் பாதிப்பு வராது
6 )"கர்ப"தொப்பை மற்றும் ஊளசதை குறைவது
7 )பால் நெறி கட்டுவது இயற்கையாக சரியாகும்
8 )உண்மையில் தாயின் இளமையும், அழகும் பாதுகாக்கப்படுகிறது.
9 )பக்கவிளைவு











2)குழந்தைக்கு ஏற்படும் நன்மைகள்
1 )குழந்தைக்கு மனரீதியாக தன்னம்பிக்கை வளரும்
2 )உடற்பருமன் 
3 )ஒவ்வாமை அலர்ஜியை போக்கும்
4 )எதிர்ப்பு சக்தி
5 )சிறுநீரக பாதிப்பு
6 )மாசுபடுதல் என்பதே கிடையாது 
7 )குழந்தையின் ஜீரணத்திற்கு சுலபமானது
8 )குழந்தையின் முளை வளர்ச்சி முழுமையாடைய 
9 )எலும்பு வளர்சிக்கான முக்கிய காரணம்
10)வலுவான பற்கள்
11)வயிற்றுபோக்கு மற்றும் மலச்சிக்கல்
12)புட்டிப் பால் கொடுப்பதால் ஏற்படும் பாதிப்புகளில் சில........



3)இருவருக்கும்  ஏற்படும் நன்மைகள்
1 )தாய்க்கும் குழந்தைக்கும் இடையிலான பந்தம் வளரும்,
2 )சக்கரை நோய் வராது
3 )பால் செலவுகள் குறையும் 
4 )இதய நோய் பாதிப்பு வராது
5 )மருத்துச் செலவுகள் முழுமையாகக் குறையும்

1)தாய்க்கு ஏற்படும் நன்மைகள்:-

1 )உண்மையில் தாயின் இளமையும், அழகும் பாதுகாக்கப்படுகிறது.
தாய்ப்பால் அளிப்பதால் அம்மாவின் உடல்வாகு சீர்கெட்டுவிடும் என்பதைப் போன்ற அபத்தம் வேறு எதுவும் கிடையாது. சொல்லப்போனால், குழந்தை தாய்ப்பாலுக்காக மார்பகங்களை அடிக்கடி உறிஞ்சுவதன் விளைவாக, அம்மாவின் யூட்ரஸ் சுருங்குகிறது. அதனால் அவளது வயிற்றுப்பாகம் கருவுறுவதற்கு முன்பு இருந்த பழைய வடிவை சீக்கிரமே பெறுகிறது. மற்ற தாய்ப்பால் கொடுக்காத தாய்மார்களோடு ஒப்பிடும் போது போது குழந்தை பிறந்தவுடன் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களின் உடல் எடை சீக்கிரம் குறைந்து சிக்கென்ற தோற்றம் வரும்

2 )இது ஒரு இயற்கையான கருத்தடைமுறையாகும்.
முதல் இரண்டு மாதம் மாதவிடாய் தள்ளிபோகும் அதாவது கருமுட்டை வெளி வராமல் தடுக்கும் இருந்தாலும் கருத்தடை முறையை பிள்ளைப் பெற்று 42 நாட்களின் தொடங்கலாம்

3 )"கர்ப"தொப்பை மற்றும் ஊளசதை குறைவது
 சிலர் பிரசவத்துக்குப் பிறகு சரசரவென எடை போட்டுவிடுவார்கள். மீண்டும் பழைய உடல்வாகைப் பெற முழுமையான தாய்ப்பால் கொடுப்பது உதவும் குழந்தை  பாலுக்காக மார்பகங்களை அடிக்கடி உறிஞ்சுவதன் விளைவாக அம்மாவின் யூட்ரஸ் சுருங்குகிறது. அதனால் அவளது வயிற்றுப்பாகம் கருவுறுவதற்கு முன்பு இருந்த பழைய வடிவை சீக்கிரமே பெறுகிறது.

4 )உயர் ரத்த அழுத்த (Blood Pressure)நோய்யில் இருந்து பாதுகாப்பு.
அமெரிக்காவில் உள்ள வடக்கு கரோலினா பல்கலைக்கழகமானது 56000 அமெரிக்க தாய்மார்களிடம் இந்த ஆய்வை மேற்கொண்டனர். அதில் பிறந்த குழந்தைகளுக்கு தாய்பால் கொடுக்காத 8900 பெண்களுக்கு உயர் ரத்தஅழுத்த நோய் (Blood Pressure)ஏற்பட்டிருந்ததை கண்டறிந்தனர். அதேசமயம் தாய்பால் கொடுத்த பெண்களுக்கு உயர்ரத்த நோய் எதுவும் ஏற்படவில்லை. எனவே தாய் பால் கொடுப்பதற்கும், பெண்களுக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கும் தொடர்ப்பு இருப்பது தெரிய வந்தது.

5 )இதய நோய் பாதிப்பு வராது 
உடலில் உள்ளகொழுப்பு குழந்தைக்கு சத்தாக மாறி சென்று விடுவதால் இதயம் பாதுகாக்கப்படுகிறது மற்றும் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு இல்லை என்று ஆய்வுகள் தெரிவிகின்றன

6 )கர்பப்பை சூலக புற்று நோயிலிருந்தும் பாதுகாப்பு.
 குழந்தை  பாலுக்காக மார்பகங்களை அடிக்கடி உறிஞ்சுவதன் விளைவாக அம்மாவின் யூட்ரஸ் சுருங்கி பழைய நிலையை அடைகிறது.எனவே நோய் தொற்று புற்று நோயிலிருந்தும் பாதுகாக்கப்படுகிறது

7 )பால் நெறி கட்டுவது இயற்கையாக சரியாகும்
முறையாக  பால் புகட்டினால் எம்மா பால் கட்டுது அப்புறம் வலிக்குது குத்துது குடையுது ஏன்?

8 )பக்கவிளைவு
குழந்தைக்கு பால் தராமல் பாலை நிறுத்துவதற்கு எடுக்கும் அனைத்து முயற்சியும் பக்கவிளைவு தான்.ஒவொரு முயற்சியும் ஒவொரு வகையில் பக்கவிளைவை தரும்
9)மார்பகப் புற்று நோயிலிருந்தும் பாதுகாப்பு.

2)குழந்தைக்கு ஏற்படும் நன்மைகள்:-


1 )குழந்தைக்கு மனரீதியாக தன்னம்பிக்கை வளரும்
தாய்க் கும் சேய்க்கும் மனஅமைதி மகிழ்ச்சி ஆகியவை ஏற்படுகிறது. கையில் எடுத்து மார்போடு அணைத்து பால் கொடுப்பதன் மூலமாக குழந்தைக்கு ஒரு பாதுகாப்பு உணர்ச்சி ஏற்பட்டு அது மனநிறைவோடு காணப்படுகிறது.

2 )உடற்பருமன் 
தாய்பபால் உட்கொள்ளும் பிள்ளைகள் மற்ற குழந்தையை விட உடற் பருமனால் சிறிதாகவே பாதிக்கப்படுகின்றனர். குழந்தைகளுக்கு நீண்ட நாட்கள் தாய்பபால் கொடுப்பதால் உடல் பருமனாவது ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தப்படுகிறது.

3 )அலர்ஜியை போக்கும்
தாய்ப்பால் பிறந்த குழந்தைகளுக்கு ஆஸ்துமா மற்றும் காது சம்பந்தப்பட்ட நோய்கள் உண்டாவதைத் தடுக்கும்.பசும்பால் கொடுப்பது சில பிள்ளைகளுக்கு அலர்ஜி எனப்படும் ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது. ஆனால் குழந்தைக்கு என்று உற்பத்தி ஆகும்  பால்  தாய்ப்பால் எனவே அது ஒவ்வாமையை ஏற்படுத்தாது. பசும்பாலோடு ஒப்பிடும்போது தாய்ப்பால் கொடுப்பது 100 சதவீதம் பாதுகாப்பானது.

4 )எதிர்ப்பு சக்தி
பிறந்த குழந்தைக்கு நோய் எதிர்ப்பு மண்டலம் முழுமையாக வேலை செய்யத் தொடங்காது. இந்த நேரத்தில் குழந்தைக்கு நோய் எதிர்ப்புச் சக்தி வேண்டும். எப்படி அதை ஏற்படுத்துவது? தாய்ப்பாலில்‘இம்யூனோக்ளோபின் ஏ’ என்கிற பொருள் இந்த நோய் எதிர்ப்பு சத்தியை அதிகரிக்கச் செய்கிறது.  மேலும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்குத் தேவையான டி.எச்.ஏ (Docosahexaenoic acid) மற்றும் ஏ.ஆர்.ஏ. (Arachidonic Acid) ஆகியவையும் தாய்ப்பாலில் நிறைந்து உள்ளன. எனவே, தாய்ப்பாலுக்கு இணையான உணவு குழந்தைக்கு வேறு எதுவும் கிடையாது.

5 )சிறுநீரக பாதிப்பு
மாட்டு பாலில் உள்ள அடர்த்தி காரணமாக குழந்தையின் சிறுநீரகங்கள் அதிக அளவில் செயல்பட வேண்டியிருக்கிறது. பிற்காலத்தில் சிறுநீரக பாதிப்பு ஏற்பட 80 சதவிதம் வாய்ப்பு உள்ளது

6 )மாசுபடுதல் என்பதே கிடையாது 
உலகத்திலேய மாசு இல்லாத ஒரே உணவு தாய்பபால்

7 )குழந்தையின் ஜீரணத்திற்கு சுலபமானது
மாட்டு பாலை விட அடர்த்தி குறைவானது எனவே சுலபமாக ஜீரணமாகும்  (மாட்டுப் பால் கண்று குட்டியின் ஜீரணஅமைப்பிற்கு தகுந்த அளவிற்கு அடர்த்தி அதிகமானது )மாட்டுப்பாலில் உள்ள சத்துக்களும் குழந்தையின் உடல் ஜீரணனித்து ஏற்றுக்கொள்ளாமல் மலமாக வெளியேற்றிவிடும்

8 )குழந்தையின் முளை வளர்ச்சி முழுமையாடைய 
உங்கள் குழந்தை உலகம் போற்றும் திறமை யோடும் ஆற்றலோடும் வளரவேண்டுமாஅப்படியென்றால் தாய்ப்பால் கொடுங்கள். ஏன் என்றால்  புட்டிப்பால் குடித்த குழந்தைகளை விட தாய்ப்பால் குடித்த குழந்தைகள் அறிவு ஜீவிகளாக இருப்பதை லண்டன் தேசிய அறிவியல் கழகம் நியூசிலாந்தில்  1037குழந்தைகளிடம் நடத்தப்பட்ட  டி.என்.ஏ. ஆய்வில் உறுதி செய்யப்பட்டது..மற்ற பால் மூலம் குழந்தையின் உடல் வேண்டுமானால் நன்கு வளர்ச்சியடையலாம்.ஆனால் மூளை வளர்ச்சிக்கு உரியது தாய்ப்பால் தான்.

9 )எலும்பு வளர்சிக்கான முக்கிய காரணம்
குழந்தையின் உடல் ஜீரணனித்து ஏற்றுக்கொள்ளும் கால்சியம் தான் எலும்பு வளர்சிக்கான முக்கிய காரணம். மாட்டுப்பாலில் உள்ள கால்சியம் அடர்த்தி அதிகம் குழந்தையின் உடல் ஏற்றுக் கொள்ளாமல் மலமாக போய்விடும்

10 )வலுவான பற்கள்
தாய்ப்பாலில் குழந்தையின் உடல் ஏற்றுக்கொள்ளும் கால்ஷியம், பாஸ்பரஸ் மற்றம் பிற உணவுத் சத்துக்கள். அதிகமாக இருக்கின்றன. தாய் தன் சேய்க்கு தாய்ப்பால் கொடுப்பதைத் தவிர்க்கக் கூடாது. தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகளுக்கு பற்கள் உறுதியாக அழகாக பால்போல் வெளுத்து பக்குவமாய் முளைக்கும்.மேலும் பல் சொத்தை எலும்பு நோய் வராமல் காக்கிறது
11)வயிற்றுபோக்கு மற்றும் மலச்சிக்கல்
குழந்தை தாய்பாலினால் நோய் எதிர்ப்பு சக்தியினை பெறுவதினால் குழந்தை பல்வேறு நோய்களினாலும்,வயிற்றுபோக்கினாலும் அவதியுராது  மலச்சிக்கலையும் ஏற்படுத்தாது.
12)புட்டிப் பால் கொடுப்பதால் ஏற்படும் பாதிப்புகளில் சில........ 
பிறந்த குழந்தைக்குப் புட்டிப்பால் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். புட்டிப்பால் கொடுக்கும் குழந்தைக்குப் போதிய ஊட்டச்சத்து கிடைக்காததால் பற்கள் வலுவிழந்து பொலிவிழந்து முளைக்கும். முளைத்த பல் சிறுகச் சிறுகச் சிதையும். மேலும் புட்டிப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு பாலிலுள்ள சர்க்கரைப் பொருள்கள் பற்களில் படலமாகப் படிந்து, கிருமிகளால் தாக்கப்பட்டு பால் பற்களுக்கு பற் சொத்தையை வரவழைக்கும். புட்டிப்பால் குடிக்கும் குழந்தைகள் ரப்பரை வாயில் வைத்து அழுத்திச் சுவைப்பதால் மென்னையான குழந்தையின் தாடை பாதிக்கப்பட்டு, தாடை முன்னோக்கி வளரும்.
 

3)இருவருக்கும்  ஏற்படும் நன்மைகள்:-

1 )தாய்க்கும் குழந்தைக்கும் இடையிலான பந்தம் வளரும்
தாய்பால் என்பது தாயுக்கும் குழந்தைக்கும் இடையே நடக்கும் பாசப்பகிர்வு. தாய்ப்பாசம் தளைத்தோங்க தாய் தன் குழந்தைக்குக்  கொடுக்கும் தாய்ப்பால் பிற்காலத்தில் குழந்தை மனதில் தாயின் மீதுள்ள பாசம் உலகில் வேறு எந்தவொரு பொருளின்மீது உள்ளதைவிடவும் பலமடங்கு அதிகரிக்கச் செய்கிறது என்பது அறிவு சார்ந்த சான்றோர் கருத்து.

2 )மருத்துச் செலவுகள் முழுமையாகக் குறையும்
நோய் எதிர்ப்பு சக்கியை இயல்பாகவே தருவதாலும் மருத்துச் செலவுகள் முழுமையாகக் குறையும்

3 )பால் செலவுகள் குறையும் 
குழந்தைக்கு பால் தருவதற்காக தாய் சத்தான காய்+கறிகள் சாப்பிடும் செலவை விட மாட்டுப்பாலுக்கு ஆகும் செலவு அதிகம்

4)இதய நோய் பாதிப்பு வராது
பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் இருவருக்குமே சர்க்கரைநோய் ஏற்படாது, கொழுப்பு சத்துநோய் ஏற்பாடாது, இதயநோய் வருவதற்கான வாய்ப்பே இல்லை என்று அமெரிக்காவில் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. 

5 )சக்கரை நோய் வராது
தாய்க்கு:- இரத்த சர்க்கரை பாலக மாற்றப்படுவதால் உடலின் சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படும் 
குழந்தைக்கு:-தாய்ப்பால் கொடுப்பதால் லூக்கேமியா எனும் இரத்த சம்பந்தமான கேன்சர் ,சர்க்கரை நோய் (டைப் 1) மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் பிற்காலத்தில் ஏற்படுவதத் தடுக்கிறது.

6 )பக்கவிளைவு
தாய்க்கு:-குழந்தைக்கு பால் தராமல் பாலை நிறுத்துவதற்கு எடுக்கும் அனைத்து முயற்சியும் பக்கவிளைவுதான்
குழந்தைக்கு:-தாய் பால் தராமல் நிறுத்துவதால் பிற்காலத்தில் ரத்தசோகை போன்ற நோய்கள்

என்னவெல்லாம் இருக்கின்றன தாய்ப்பாலில்?
தாய்ப்பாலில், புரதம், கார்போஹைட்ரேட், அத்யாவசியக் கொழுப்பு அமிலம் போன்ற ஊட்டச்சத்துக்களும் இரும்பு, கால்சியம், பொட்டாசியம், சோடியம் உள்ளிட்ட தாது உப்புக்களும் இ, கே ஆகிய வைட்டமின்களும் நிறைந்து உள்ளன.இவைகளில் ஒரு சில மாட்டு பாலிலும் இருக்கிறது ஆனால் குழந்தையின்  உடல்  ஜீரணனித்து  ஏற்றுக்கொள்ளாமல் மலமாக வெளியேற்றிவிடும்

மருந்து:-தாய்பாலில் உள்ள ஒரு விதமான என்சைம் உடலில் உள்ள ஒரு சில பாகங்களில் பாக்டீரியா தங்க விடாது. அதனால் தாய்பால் கொண்டு சில வகையானவற்றை குணப்படுத்த முடியும். அதில் ஒன்று தான் மூக்கடைப்பு. அதனால் குழந்தையின் மூக்கில் சில துளிகள் விட்டு ஒரு பத்து செகண்ட்ஸ் பிடித்து விட்டால் மூக்கடைப்பு சரியாகும்.பூச்சுகடி, காதுவலி, டையபர் போடுவாதால் உண்டாகும் ராஷ் மற்றும் பலவற்றை ஆற்றும் சக்தி இந்த தாய்ப்பாலுக்கு உண்டு.

தாய்ப்பாலின் நன்மைகளை மட்டும் சொல்லுவதற்கே இந்தப்பதிவு பெரியதாக தோன்றியதால் பல விசயங்களை சுருக்கி இருக்கிறேன் அடுத்தபதிவில் பாலுட்டும் முறைகள்,தாய் பால் தாரளமாக சுரக்க வழிகள்,பாலுட்டும் தாய்மார்கள் உண்ணும் உணவுமுறைகள்,உறக்கமுறைகள்,போன்றவற்றை பார்க்கலாம்

Monday, October 8, 2012

"உணவின் முலமாக" இதயத்தை பாதுகாக்க இதமான வழிகள்13"


இதயத்தை பாதுகாக்க  இதமான வழிகள் 13
இந்தியாவில் புற்றுநோயால் மரணமடைபவர்களை விடவும், இதயநோயால் மரணமடைபவர்கள்தான் அதிகம் பேர்.கடந்த பத்து ஆண்டுகளில் இதயநோயினால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து  வருகிறது. இதற்கு காரணம் மாறிவரும் உணவுப் பழக்கமே இன்று பெரும்பாலும் வரும் இதய நோயான மாரடைப்பு ஏற்பட பல காரணங்கள் இருந்தாலும். அதில் உண்ணும் உணவுகள் முலமாக ஏற்படும் மாரடைப்பை எப்படி தடுப்பது என்பதனை மட்டும் பார்போம் (ஏன் என்றால் நமது சுவைஇன்பம் பிளாக் ஸ்ப்பாட் டார்ட் இன் (http://suvaiinbam.blogspot.in/) இல் உணவு சம்மந்தப்பட்ட விசங்களை மட்டும் தான் பார்த்து வருகிறோம்) ஏனெனில் உண்ணும் உணவுகளில் ஒரு சில உணவுகள் இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. மேலும் எந்த உணவுகளால் இதயத்திற்கு பாதிப்பு ஏற்படுகின்றது என்றும் மருத்துவர்கள் பட்டியலிட்டுள்ளனர். அதிலும் ஏற்கனவே இதயத்தில் பாதிப்பு இருப்பவர்கள், அத்தகைய இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் உணவுகளை உண்ணாமல் தவிர்ப்பது நல்லது. மேலும் ஆரோக்கியமாக நீண்ட நாட்கள் வாழ வேண்டுமென்றால், இப்போது கூறும் உணவுகளை அதிகம் உண்ணாமலும், உடலில் கலோரிகள் 2000 மேல் இல்லாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். அதிலும் டயட்டில் ஆரோக்கியமான உணவுகளை மட்டும் சேர்த்து வர வேண்டும்.இப்போது எந்த உணவுகள் முலமாக மாரடைப்பு ஏற்படுடும் என்று பார்ப்போமா!!!
                                                                                                          http://suvaiinbam.blogspot.in/
மாரடைப்பை ஏற்படுத்தும் உணவுகள்:-(13)
1)பாஸ்ட் புட் சைனீஸ் உணவுகள்மற்றும்டின்களில் அடைக்கப்பட்ட உணவு
2)ப்ரகோலி காலிபிளவர் (cauliflower broccoli) சாப்புடுங்க
3)சீஸ் மற்றும் வறுத்த உணவுகள்
4)குளிர்பானகள் 
5)உணவு உண்டவுடன் ஜில் தண்ணீரை தொடாதிர்
6)சர்க்கரை
7)அதிகமான கிளிசரின் உணவுகள் 
8)சாலையோர உணவகங்கள், உஷார்
9)ஆல்கஹால்
10)அளவான உப்பு
11)த்த சோகை(சாப்புடாம இருப்பதினாலேதனே வருது)
12)கொழுப்புச் சத்து(இதுவும் சாப்பாட்டுனாலதனே உண்டாகுது) 
13)வயிறு புடைக்க சாப்பிடாதிர் 
---------------------------------------------------------------------
1) டின்களில் அடைக்கப்பட்ட உணவுகள், பாஸ்ட் புட் மற்றும் சைனீஸ்  
  உணவுகள்:-

       
சைனீஸ் உணவுகளில் அதிகமான அளவில் இதயத்திற்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களை சேர்க்கின்றனர். எனவே சைனீஸ் உணவுகளை அதிகம் சாப்பிட கூடாது.அதிலும் அந்த உணவுகளில் அஜினோமோட்டோ மற்றும் சோயா சாஸ் என்னும் இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் பொருட்களையும் சேர்க்கின்றனர். மேலும் உடலில் 1500 மில்லி கிராம் சோடியம் இருப்பது இதயத்திற்கு பெரும் பாதிப்பானது. அத்தகைய அளவு சோயா சாஸில் இருக்கிறது. சைனீஸ் உணவுகள் அதிக சுவையுடன் இருப்பதற்கு அந்த சோயா சாஸ் தான் காரணம். ஏனெனில் அதனை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துகின்றனர். இதனால் உடல் ஆரோக்கியம் பாதிப்பதோடு, இதய நோயும் ஏற்படுகிறது.பாஸ்ட் புட்" சாப்பாடு, டின்களில் அடைக்கப்பட்ட உணவு ஆகிய இரண்டுமே உங்கள் பாக்கெட்டுக்கும் (பணம்) உங்கள் இதயத்துக்கும் நல்லதல்ல.
            -------------------------------------------------------------
2)(cauliflowerbroccoli) ப்ரகோலி காலிபிளவர் சாப்புடுங்க



மார்பகப் புற்றுநோயை ஏற்படுத்தும் ஸ்டெம் செல் வளர்ச்சியைப்ரகோலி’ காலிபிளவர் வகை உணவு தடுக்கும் என்று அமெரிக்க ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.

cauliflower broccoli
                      -------------------------------------------
 3)சீஸ் மற்றும் வறுத்த உணவுகள்: - 


 
பசி எடுக்கும் போது, பசியில் வாசனை விசும் உணவுகள் கண்களுக்கு கவர்சியான உணவுகள் என்று தான் சாப்பிடத் தோன்றும்.ஆனால் சீஸ் அதிகம் பயன்படுத்தும் உணவுகள், எண்ணெயில் வறுத்த உணவுகள் சாப்பிட்டால், அதில் உள்ள கெட்ட கொழுப்புக்கள், உடலில் சேர்ந்து இரத்தத்தில் கொலஸ்ட்ராலை அதிகரித்துவிடும். இதனால் தமனிகளில் கொழுப்புக்கள் சேர்ந்து அடைப்புகளை ஏற்படுத்தும். அதுமட்டுமல்லாமல், வேறு பல இதய நோய்கள், ஏன் மாரடைப்பு கூட ஏற்படும் வாய்ப்புள்ளது. ஆகவே
                       -------------------------------------

4)குளிர்பானகள் :-



குளிர்பானகளை( அக்கா மாலா, கப்சி, போன்ற )தினமும் குடிப்பவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என அமெரிக்காவை சேர்ந்த ஹார்வர்டு பல்கலைக்கழகம் கடந்த 22 ஆண்டுகளாக நடத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.குளிர்பானத்தில் கலக்கப்படும் சில ரசாயன கலவைகள் இதயத்துக்கு தீங்கு விளைவிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
       -----------------------------------------------------------------------------
 5)உணவு உண்டவுடன் ஜில் கூல் தண்ணீரை தொடாதிர்:- 



உணவு உண்டவுடன் குளிர்ச்சியான தண்ணீரை குடித்தால், அது நாம் சாப்பிட்ட உணவில் உள்ள எண்ணெய்த் துகள்களை கெட்டியாக்கி விடுகிறது. இதனால் சாப்பிட்ட உணவு ஜீரணம் ஆவதில் சிக்கல் ஏற்படுகிறது.உடலில் இருக்கும் கொழுப்பின் அளவு அதிகரிக்கவும் அது காரணமாகி விடுகிறது. இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் இதயம், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பல பிரச்சினைகள் வரலாம் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.பொதுவாகவே ஜில் தண்ணீர் அருந்துவதை தவிர்த்துவிடுங்கள், அதற்கு பதிலாக வெதுவெதுப்பான நீர் அருந்துங்கள் என்று அறிவுறுத்தியுள்ளனர் மருத்துவர்கள்.
                                 -------------------------------------------------------------
6)இனிப்பு(சர்க்கரை): -


சர்க்கரை அதிகமாக உள்ள உணவுகளை உண்பதும் இதயத்திற்கு சரியானதல்ல. ஏனெனில் அவை இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரித்து, நீரிழிவை ஏற்படுத்தும். மேலும் இதில் உள்ள பொருட்களும் மாரடைப்பிற்கு வழிவகுக்கும்  
                        ---------------------------------------------------------------------
7)கிளிசரின் உணவுகள்: - 

 கார்ன் ப்ளேக்ஸ் மற்றும் வெள்ளை பிரட்களில் அளவுக்கு அதிகமான அளவில் கிளிசரின் கார்போஹைட்ரேட் இருக்கிறது. இதனை அதிகமான அளவில் சாப்பிடுவதால், இதயம் பாதிக்கப்பட்டு, மாரடைப்பு ஏற்படுகிறது. ஆகவே இதனை இதய நோய் இருப்பவர்கள், முற்றிலும் சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது. மற்றவர்கள் குறைந்த அளவில் உட்கொண்டால் போதுமானது.
                                                  -----------------------------------------------------------------
 8)சாலையோர உணவகங்கள், உஷார்:- 

சாலையோர உணவகங்களில் சுகாதாரமற்ற முறையில் வடை, பஜ்ஜி, போண்டா, இட்லி, தோசை, பிரியாணி, புரோட்டா, இறைச்சி, மீன் உள்ளிட்ட அனைத்து உணவுகளையும் விற்பனைசெய்கிறார்கள்.எண்ணெயைத் திரும்பத் திரும்பக் கொதிக்கவைத்து உபயோகிக்கின்றனர் எண்ணெயைத் திரும்பத் திரும்பக் கொதிக்க வைக்கும் போது டிரான்ஸ் கொழுப்பு அமிலம் உற்பத்தியாகிறது.இதுதான் இருக்கின்றகொழுப்புகளிலேயே மிகவும் கொடூரமானது. இதயத்தமனிக் குழாய்களை நேரடியாகவும், விரைவாகவும் அடைத்து, மாரடைப்பை உடனடியாக வரவழைக்கும் ஆபத்து
                                       ------------------------------------------------------------
 9)ஆல்கஹால்:-



ஆல்கஹாலில் ஒன்றான ரெட் ஒயினை அவ்வப்போது ஒரு டம்ளர் சாப்பிட்டால், மாரடைப்பை தடுக்கலாம் என்று பல ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதையே அதிகமாக சாப்பிட்டால், அதற்கான எதிர்பலன் தான் கிடைக்கும். ஏனெனில் பொதுவாக மாரடைப்பிற்கு ஆல்கஹாலும் ஒரு பெரும் காரணம். அது இதயத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே தான், அதிக அளவில் ஆல்கஹால் அருந்துபவருக்கு விரைவில் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது. அதுமட்டுமில்லாமல், அவை மாரடைப்பிற்கும் வழிவகுக்கிறது.

                 -------------------------------------------------
10)அளவான உப்பு :-







உணவில் உப்பு பயன்படுத்துவதைக் குறைத்தால் அது பல்வேறு உடல் பிரச்னைகளை ஏற்படுத்தி இறுதியில் இருதய நோயை ஏற்படுத்தும் என்று மருத்துவ ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.பொதுவாக உப்பை அதிகம் உட்கொண்டால் அது உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தி மாரடைப்பை உருவாக்கும் என இதுநாள் வரை கருதப்பட்டது.ஆனால் 40,000 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட 67 ஆய்வு முடிவின்படி உப்பைக் குறைத்துக் கொள்வோரின் உடலில் 2.5 சதவீதம் கொழுப்பு அதிகரிப்பதாகத் தெரியவந்துள்ளது என்று லண்டனில் வெளியாகும் நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.அளவான உப்பு பயன்படுத்துங்கள்
                         ---------------------------------------
11)ரத்த சோகை(சாப்புடாம இருப்பதினாலேதனே வருது):-  
















இரும்பு சத்து இல்லாத உணவுகளை உண்ணும் பழக்க உடையவராக இருந்தால், இரும்பு சத்து அதிகம் இருக்கும் உணவுகளை அவர் சாப்பிட வேண்டும், கீரை, பீன்ஸ், பருப்பு வகைகள், சோயா பீன்ஸ், உலர் திராட்சை ஆகியவற்றில் இரும்பு சத்து அதிகம் இருக்கிறது.வலிநிவாரணி, ,வீக்கத்தை குறைக்கும் மருந்துகளாலும், ரத்த சோகை ஏற்படலாம் என்பதால் அவற்றிற்கான மூல காரணத்தை சரி செய்ய வேண்டும். இத்தகைய ரத்த சோகையை போக்க குழந்தைகளுக்கு உணவில் அதிக இரும்பு சத்துள்ள கீரைகளை முருங்கைக்கீரை, அரைக் கீரை, ஆரைக்கீரை, புதினா, கொத்த மல்லி, கறிவேப்பலை, அகத்திக் கீரை, பொன்னாங் கண்ணி கீரை போன்ற கீரைகளையும், திராட்சை, பேரீட்சை, உலர்ந்த திராட்சை பப்பாளி, அத்திப் பழம், மாம்பழம், பலா பழம், சப்போட்டா ஆப்பிள், நெல்லிக்கனி போன்ற பழங்களையும் தினமும், கொடுத்து வருவது நல்லது. இதனால் ரத்தம் விருத்தி அடைந்து ரத்த சோகை நீங்கும். மாரடைப்பு பயமும் போகும்
                                   -------------------------------------------------------------------
 12)
கொழுப்புச் சத்து(இதுவும் சாப்பாட்டுனால தானே உண்டாகுது):-

                                                              


கொழுப்புச் சத்து அதிகம் காணப்படுவது ஆபத்து என்றாலும் நமது உடலுக்கு தேவையான அளவுகொழுப்புச் சத்தை பராமரிப்பதும் அவசியம் ஆகும். நாம் உண்ணும் உணவில் உள்ள வைட்டமின்கள் ஏ,டி,,கே போன்றவைகள் கொழுப்பில் கரைக்கப்பட்டே உடலுக்குள் செலுத்தப்படுகிறது. மொத்த கொழுப்பின் அளவு (LDL)200-க்குள் இருக்க வேண்டும். இந்த அளவில் இருந்தால் இதய நோய்கள் தாக்குவதற்கான வாய்ப்பு குறைவாக இருக்கும். 200-லிருந்து 239 வரை கொழுப்பின் அளவுஇருக்கும்பட்சத்தில் இதயநோய் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது என்று எடுத்துக் கொள்ளலாம். 240-க்கும் மேலாக இருந்தால் இவர்களுக்கு இதய நோய்க்கான ஆபத்து அதிகமாகும்.உயர் அடர்வு கொழுப்பு (HDL)40-க்கும் குறைவாக இருந்தாலும் ஆபத்து ஆகும்.(அதிகமா இருந்தா குறைசிகங்க கம்மியா இருந்தா நல்லா சாப்புடுங்க)

கொழுப்பை குறைக்கும் உணவுகள்,பூண்டு,இஞ்சி,வெங்காயம்(குறிப்பாக சின்ன வெங்காயம்),சிவப்பு அரிசி,நிலக் கடலை,லவங்க மசாலா பட்டை,மீன்(குறிப்பாக கவளை மீன் எனப்படும் சாலை மீன்),மஞ்சள்,கருப்பு திராட்சை,கொள்ளு,சோயா,கோதுமை போன்ற தாணியங்களும் கொழுப்பை குறைக்கிறது,
கொழுப்பை அதிகரிக்கும் உணவுகள்:-எண்ணெய்நெய், டால்டாதேங்காய் எண்ணெய்மூளைக் கறி,நண்டுஈரல் முதலிய அசைவ உணவு வகைகள்ஊறுகாய்பாலாடை, பால், பால்கோவாமுந்திரி,தேங்காய்வேர்க்கடலை உள்ளிட்டவற்றில் கொழுப்புச் சத்து அதிகம்.

13)வயிறு புடைக்க சாப்பிடாதிர்:-

வயிறு புடைக்க உண்பதினால் ரியாக்த்வ் ஆக்சிஜன் உருவாகிறது அவைஇரத்ததமணிகளில் எரிச்சலை ஏற்படுத்தும் இவை நாளடைவில் மாரடைப்பை உண்டாக்கும். அரை வயிறு சாப்பாடு கால் வயிறு தண்ணிருக்கு கால் வயிறு காற்றுக்கு என உணவை பிரித்து உண்ணவேண்டும்


இருதய நோயாளிகளுக்கான உணவு வகைகள்:-

சாப்பிடக்கூடியவை : 
மஞ்சள்,வெண்ணெய் எடுத்த மோர், தக்காளி பழரசம், கிழங்கு வகை தவிர்த்த காய்கறிகள் கூட்டு, சாம்பார், ரசம், மோர், ஆடை எ டுத்த பால், இட்லி, தோசை (எண்ணை குறைவாக விட்டு) வெண் பொங்கல், இடியாப்பம், புட்டு, ஆப்பம், ஆரஞ்சுச்சாறு, பயறுவகை (பாசிப்பயறு) மாமிசமே......சாப்புடக்குடாதுன்னு சொல்லங்க கொஞ்சமா மாமிசம் ஒக்கே, சிறிய மீன் வகைகள்.

சாப்பிடக்கூடாத உணவுகள் :
சீஸ், சிப்ஸ், பிரன்ச் பிரைஸ், பீட்சா,காபி, டீ, முட்டை மஞ்சள் கரு, வெண்ணெய், நெய், டால்டா, தேங்காய்ப் பொருட்கள், மசாலா வகைகள், ஈரல், மூளை, கிட்னி, முந்திரிப் பருப்பு, பேக்கரி உணவுகள்.பாலில் கொழுப்பு அதிகம்

உணவையும் தாண்டி வாயினால் செயக்கூடிய  ஒரு விஷயம் புகை பிடித்தல்  
  
புகைபிடித்தல் என்பது நாம் கட்டுப்படுத்தக் கூடியது. 45 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கு வரும் மாரடைப்புகளில், 80 சதவீதம் புகைபிடிப்பவருக்கே வருகிறது. புகை பிடிக்காதோரை ஒப்பிடுகையில், புகை பிடிப்போருக்கு மாரடைப்பு வரும் வாய்ப்பு இரண்டிலிருந்து மூன்று மடங்கு அதிகரிக்கிறது.நிக்கோடினும், இருதய ரத்தக்குழாயும்:ரத்தநாளங்களில் அடைப்பும்:கார்பன் மோனாக்சைடு, ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களில் உள்ள ஆக்சிஜனை விலக்கிவிட்டு, அந்த இடத்தில் தான் போய் அமர்ந்து கொள்கிறது. இதனால் உடலில் ஆக்சிஜன் அளவு குறைகிறது. சரியான அளவு ஆக்சிஜன் கிடைக்க பெறாததால், இருதயமும், மற்ற உறுப்புகளும் எளிதில் சோர்வடைகின்றன

ஆகவே மேற்கூறிய உணவுகளை தவிர்த்து, ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, இதயமும் ஆரோக்கியமானமாக இருக்கும்.


இந்த பதிவை எழுதுவதற்கு பதிமூன்று மணிநேரம் ஆகிவிட்டது எனது 13மணி நேர உழைப்பை மதித்து  இந்த பதிவை காப்பிபேஸ்ட் பண்ணுபவர்கள் எனது வெப் url http://suvaiinbam.blogspot.in/ யும் சேர்த்து போட்டு உதவுங்கள் 
மேலும் இந்த பதிவு உபயோகமாக இருக்கிறது என்று நினைத்தால் வலைதளம் மற்றும் சமூக வலைதளத்தில் பகிரவும் நன்றி