Wednesday, March 13, 2013

கம்பின் நன்மைகளும் கம்மஞ்சோறு சமைக்கும் முறையும்

கம்பின் நன்மைகளும் கம்மஞ்சோறு சமைக்கும் முறையும்
கம்பஞ்சோறு மிகவும் சத்துள்ள ஒரு உணவு மட்டுமின்றி நீண்டநேரம் பசியைத் தாக்குப் பிடிக்கக் கூடியது.
சோளம்போல கம்பும் ஆப்பிரிக்காவில் இருந்து வந்ததுதான். ஆனால், கி.மு. 2500-களிலேயே இங்கு கம்பு பயிரிடப்பட்டு இருந்தது என்பதற்கான தொல்லியல் சான்றுகள் உள்ளன. சங்க இலக்கியப் பாடலிலும் சித்த மருத்துவப் பயன்பாட்டிலும் இந்தத் தானியம் இருப்பதே இதன் தொன்மைக்குச் சான்று.
அரிசியைக் காட்டிலும், கனிமம், கால்சியம், புரதம், இரும்பு, உயிர்ச் சத்து என அனைத்துச் சத்துகளுமே அதிகம்கொண்ட தானியம் கம்பு (பார்க்க அட்டவணை).
கன்னடத்தில், 'பஜ்ரா’ என்று அழைக்கப்படும் இந்தக் கம்பு, கர்நாடகத்திலும் ஒரு சில வட மாநிலங்களிலும் இன்றும் மிகப் பிரபலம். அரிசியைக்காட்டிலும் கிட்டத்தட்ட 8 மடங்கு அதிக இரும்புச் சத்து உள்ள இந்தத் தானியம், வேகவைக்க கொஞ்சம் மெனக்கெட வைக்கும். சாதாரண அரிசிபோல அப்படியே கழுவி வேகவைக்க முடியாது. மிக்ஸியில் ஓர் அடி போட்டு, இரண்டாக உடைத்து, இரண்டு மணி நேரம் ஊறவைத்து, அதன் பின் உலையில் போட்டு வேகவைத்தால்தான் நல்ல குழைவாக வரும். ஆனால், சுவையிலோ, பிற அரிசி வகையறாக்கள் கம்பின் பக்கத்தில் வர முடியாது. அத்தனை அருமையாக இருக்கும். அனைத்துச் சத்துக்களுமே சற்று தூக்கலாக உள்ள இந்த தானியம், வளரும் குழந்தைகளுக்கும் மாதவிடாய் துவங்கிய பெண் குழந்தைகளுக்கும் மாதம் 45 முறை கண்டிப்பாகத் தர வேண்டிய தானியம்.
பொதுவாக, கம்பு என்றாலே அதனைக் கூழாக, கஞ்சியாகத்தான் சாப்பிட வேண்டும் என்ற நினைப்பு நம்மில் பலருக்கும் உண்டு. 'சிறைக்குப் போனால் கம்பங்களிதான் தின்ன வேண்டும்’ என்பது போன்ற பேச்சுகளும் இதற்குக் காரணம். ஆனால் கஞ்சியாக மட்டும் அல்ல; சாதமாக, அவலாக, பொரியாக... எப்படி வேண்டுமானாலும் கம்பைச் சாப்பிடலாம். அருமையான நாட்டுக் கோழி பிரியாணியோ, ஹைதராபாத் தம் பிரியாணியோகூட கம்பில் செய்து கலக்கலாம். கம்பை இரண்டாக உடைத்து, தண்ணீரில் ஊறவைத்து, அதற்குப் பின் நெல் அரிசியில் எப்படி பிரியாணி செய்கிறீர்களோ அப்படியே செய்ய வேண்டியதுதான். கோழி மீது இரக்கம் உள்ளவர்கள், பீன்ஸ், கேரட், ரொட்டித் துண்டு போட்டு வெஜிடபிள் பிரியாணியும் செய்யலாம்.
கம்பு ரொட்டி சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். கம்பில் உள்ள லோ கிளைசிமிக் தன்மையாலும், அதில் ஏற்கெனவே உள்ள கூடுதல் நார்ச் சத்தினாலும், காலை/ மதிய உணவில் இதை எடுக்கும்போது பட்டை தீட்டிய அரிசிபோல், கம்பு ரொட்டியும் கம்பஞ்சோறும் பிரச்னையைத் தராது. அரிசியைப் போல் அல்லாமல், கம்பரிசி, உமி தொலி நீக்கிய பின்னரும் அதன் உள் பகுதியில் அத்தனை நல்ல விஷயங்களையும் தன்னகத்தே வைத்திருக்கும். தவிர, இதில் உள்ள 'அமைலோஸ் அமைலோபெக்டின்’ அமைப்பு நெல் அரிசியைக்காட்டிலும் மாறுபட்டது. இன்னும் இறுக்கமானது. அதனால்தான், சீரணத்துக்கும் கொஞ்சம் தாமதமாகிறது. இந்த அமைப்பினால் மெள்ள மெள்ளவே கம்பின் சர்க்கரையை ரத்தத்தில் கலக்கச் செய்வதால், லோகிளைசிமிக் உணவாக இருந்து சர்க்கரை நோயாளிக்குப் பெரிதும் உதவுகிறது. சத்துச் செறிவு அடர்த்தியாக உள்ள கனத்த உணவு என்பதால், என்னதான் பிடித்த குழம்பை, பிடித்த கையுள்ளவர் பரிமாறினாலும் கம்பு சாதத்தை ஒரு கட்டு கட்ட முடியாது. அளவாகச் சாப்பிடுவதால், எடை குறைக்க விரும்புவோருக்கும் இது ஓர் அற்புதத் தானியம்.
இன்று பலரும், நான் ''டயபடிக் சார். அரிசியே சாப்பிடுறது இல்லே. வெறும் சப்பாத்திதான் மூணு வேளையும்'' என்பார்கள். அது தேவையே இல்லை. சர்க்கரை நோய்க்கான சரியான சிகிச்சையை உங்கள் குடும்ப மருத்துவர் ஆலோசனைப்படி எடுத்துக்கொண்டு, வாரம் இரு நாள் கம்பஞ்சோறு, இரு நாள் புழுங்கல் அரிசிச் சோறு, இன்னொரு நாள் தினை சாதம், இரவில் கேழ்வரகு அடை, எப்போதாவது காலை உணவாக வரகரிசிப் பொங்கல், சோள தோசை, குதிரைவாலி இட்லி என்று சாப்பிடப் பழகினால், சாப்பாத்திக்கு அடிமை வாழ்க்கை வாழ வேண்டிய அவசியம் இல்லை. இப்படிப் பல தானியங்களையும் கலந்து எடுத்துக்கொள்வதுடன் கொஞ்சம் உடல் உழைப்பும் கொடுத்து வாழுங் கள். உங்கள் சர்க்கரை நோய் எப்போதும் கட்டுக்குள்ளேயே இருக்கும். மைசூரில் இயங்கிவரும் மத்திய அரசின் உணவுத் தொழில்நுட்ப உயர் நிறுவனம் (சி.எஃப்.டி.ஆர்.ஐ.) தன் பல ஆய்வுகளில், இந்தச் சிறுதானியங்கள், அரிசி, கோதுமையைக் காட்டிலும் பல வகைகளில் சிறந்தது என்பதையே மீண்டும் மீண்டும் சொல்கிறது. கம்பு சம்பந்தமாகச் சமீபத்தில் படித்த ஓர் ஆச்சர்யமான விஷயம்... செல்கள் பாதுகாப்புக்கு கம்பு உதவும் என்பது. கொஞ்சம் சூட்டு உணவு என்பதால், கம்பு சாப்பிடும்போது குளிர்ச்சிக்கு மோர், சின்ன வெங்காயத்தைச் சேர்த்துக்கொள்வது நல்லது.
 கம்மஞ்சோறு சமைக்கும் முறை
 கம்பு வாங்கி அதை மிக்ஸியில் போட்டு இரண்டாக உடைத்து அடுப்பில் அரிசிக்கு உலை வைப்பது போல உலை வைத்து தண்ணீர் கொதி வந்தவுடன் இந்த கம்பரிசியை விட வேண்டும்.இது அரிசியை விட வேக சிறிது நேரம் பிடிக்கும்.கூழ் போன்ற பதத்தில் வந்தவுடன் இறக்கினால் கம்பஞ்சோறு தயார்.

தயிர்,மோர் ஏதேனும் கலந்து எலுமிச்சை, நாரத்தை போன்ற ஊறுகாய்கள் தொட்டுக்கொள்ள சுவை சூப்பர்.

நாட்டுமீன்வகைகளான,கெளுத்தி,குர
வை,வெரால்,அயிரை,உளுவை போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை குழம்பு வைத்து கம்பரிசி சோறுடன் சாப்பிட ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் சுவை சூப்பரோ சூப்பர். நாட்டு மீன்களை தேடிச்செல்ல முடியாத இந்தக்காலத்தில் கடல் மீன்களை நாடலாம்.

கம்பு போன்ற சிறுதானியங்கள் உடலுக்கு வலுவைத்தரும், சிறு நீர்ப்பெருக்கும், இரத்தம் சுத்தமாகும், கண் பார்வைக்கு நல்லது,அசீரணக் கோளாறுகள் உள்ளவர்கள் அடிக்கடி கம்பு உள்ளிட்ட சிறு தானிய உணவுகளை சாப்பிட்டு வரலாம்.

Wednesday, March 6, 2013

ஆண்மை குறைவு போக்க அரும் மருந்து

ஆண்மை குறைவு போக்க அரும் மருந்து.


அமுக்கறான் கிழங்கு 700 கிராம்,
நிலபனை கிழங்கு 700 கிராம், 
சுக்கு 70 கிராம்,
மிளகு 70 கிராம்,
திப்பிலி 70 கிராம்,
சித்திர மூலம் 70 கிராம்,
ஏலம் 35 கிராம்,
கிராம்பு 35 கிராம்,
சிறுனாகபூ 35 கிராம்,
ஜாதிக்காய் 35 கிராம், 
லவங்க பத்திரி 35 கிராம், 
சவ்வியம் 72 கிராம், 
பேரிச்சம் காய் (விதை நீக்கியது) 525 , 


ஆகியவைகளை நாட்டு மருந்து கடையில் வங்கி நன்றாக இடித்து சலித்து வைத்து கொள்ளவும். பிறகு மூன்று லிட்டர் சுத்தமான பசும் பாலில் ஓன்றரை கிலோ நாட்டு வெல்லத்தை கரைத்து நன்றாக பாகு பதம் வரும்வரை மிதமான சூட்டில் காய்ச்சி அதில் இந்த பொடிகளை போட்டு நன்றாக கிளறி இறக்கிவிடுங்கள். நன்றாக சூடு ஆறியபிறகு அதில் 50 மில்லி தேனையும், 700 மில்லி நெய்யையும் போட்டு நன்றாக கிளறி காற்று போகாத ஒரு பாட்டலில் இட்டு மூடி வைத்துவிடுங்கள். ஐந்து நாட்கள் கழித்து ஒரு கோலிகுண்டு அளவு மூன்று நேரம் உணவுக்கு முன்னாள் 90 நாட்கள் சாப்பிட்டு வாருங்கள். ஆண்மை குறைவு நீங்கும். 

Monday, March 4, 2013

வெற்றிலை பாக்கு போடுவது எப்படி? தெரியுமா உங்களுக்கு

 வெற்றிலை பாக்கு போடுவது எப்படி? தெரியுமா உங்களுக்கு



 வெற்றிலை பாக்கு போடுபவரா நீங்கள் ?

ஜீரண சக்திக்கு வெற்றிலை ரொம்ப நல்லது. அதுதவிர நாம் சாப்பிடும் சாப்பாட்டினால் ஏதும் ஒவ்வாமை வந்தால் அதனை வெற்றிலை நீக்கும்.

வெற்றிலையோ அல்லது பாக்கோ எதுவானாலும் அதை மட்டும் தனியாக வாயில் போட்டு மெல்லக்கூடாது. வெற்றிலையை மட்டும் வாயில் போட்டு அப்படியே மென்றால் நாக்கின் நுண்ணிய நரம்புகளும், ரத்த ஓட்டமும் பாதிப்படையும். சரியாக பேச வராது. பாக்கை மட்டும் தனியே மென்றால் நெஞ்சுவலி வரும். சில சமயம் மாரடைப்பு ஏற்படலாம். தவிர ஈரல் பாதிப்புடன் சோகை வியாதியும் வரலாம்.

வெற்றிலையை இரண்டு மூன்றாக சேர்த்து வைத்துப் போடக்கூடாது. வெற்றிலையின் பின்புறத்தில் சின்னச்சின்ன பூச்சி, புழுக்கள் இருக்கலாம். வெற்றிலையை மொத்தமாக சேர்த்து மெல்லும்போது அந்த புழு, பூச்சிகளும் வயிற்றுக்குள்போகும். சிலபேரை இது உடனடியாக மயக்கத்தில்கூட தள்ளிவிடும். நடுநரம்பை ஒட்டித்தான் பூச்சிகள் இருக்கும். வெற்றிலையை கிழித்துப் போடுவது அதற்காகத்தான். அதனால் வெற்றிலையை ஒவ்வொன்றாக எடுத்து முன்னேயும் பின்னேயும் துடைத்து சுண்ணாம்பு தடவி நடு நரம்பைக் கிள்ளிப்போட்டுவிட்டு பாக்கோடு சேர்த்துப் போட்டுக்கொள்ள வேண்டும்.வெற்றிலை

வெற்றிலை பாக்கு தொடர்பான வரலாறு பற்றி நாம் இங்கே பார்க்கலாம் 

பாக்குப் போடுவது ஆண்-பெண் உறவில் இன்பத்தை மிகுவிக்கும் ஒன்றாக மிக நீண்ட காலமாகக் கருதப்பட்டு வருகிறது. இரவு நேரங்களில் உணவு உண்டபின் கணவனுக்கு, மனைவி வெற்றிலை மடித்துக் கொடுக்கும் பழக்கம் இன்றும் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்தப் பழக்கம் தமிழர்களிடையே பழங்காலத்திலிருந்தே இருந்துள்ளது.“வெற்றிலை இந்தியாவின் பூர்வீக பயிர்வகை கிடையாது. 

இறக்குமதி செய்யப்பட்ட ஒன்று. இது மலேயா நாட்டிலிருந்து தமிழகம் வந்திருக்கலாம்’ “வெற்றிலை, பாக்குப் போடும் பழக்கம் தமிழர்களிடையே சங்க காலத்துக்குப் பின் தோன்றியதாக இருக்கலாம்’ என்று வரலாற்றுப் பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரியார் கூறியுள்ளார் (தென்னிந்திய வரலாறு, பக்.213). ஆனால், சங்க இலக்கியங்களில் வெற்றிலை, பாக்குப் போடுவது பற்றிய குறிப்புகள் நிறையக் காணப்படுகின்றன.தமிழர் பண்பாட்டில் அகத்துறையில் வெற்றிலை, பாக்குப் பெற்றுள்ள இடம் பழங்காலத்திலிருந்து இன்று வரை தொடர்கிறது…

Friday, March 1, 2013

You are pomegranate fruit lover ♥ ♥

You are pomegranate fruit lover  ♥ ♥

Pomegranate Lovers ♥ ♥

Pomegranate and its juice have been found to reduce blood pressure and exert beneficial effects on blood vessels thereby reducing risk of heart attacks….
1. Antioxidants – These help to wrangle the hoards of free radicals in your system. Free radicals have an
uneven number of electrons and like to balance themselves out by stealing from other molecules and cells in your body. These cells are oftentimes very important ones dealing with your DNA, and when they are destroyed, disease steps in. Pomegranate juice is an excellent source of antioxidants that work to help you stay disease-free.

2. Blood Thinner – Pomegranate juice helps your blood circulation, making it easier for blood to travel to your heart, brain, and the rest of your body.
3. Cancer Fighter – Pomegranate has been known to reduce and prohibit the growth of cancer cells and tumors in your body.
4. Digestion Aide – Pomegranate juice is a natural remedy for diarrhea, dysentery, and great number of other digestive problems.
5. Anemia Relief – With a high content of iron, pomegranate juice is a great home cure for anemia because it promotes higher levels of hemoglobin.
6. Anti-Inflammatory – Pomegranate juice has properties that help treat sufferers of arthritis. It can also help cure a cough or sore throat.
7. Neonatal Care – It has been proven that pomegranate juice ingested by pregnant women can help protect the neonatal brain.
8. Artery Protection – It helps keep plaque from building up in your arteries.
9. Cartilage Protection – It works to prevent the deterioration of cartilage in your body.
10. Cholesterol Reducer – Pomegranate juice is capable of lowering blood pressure by as much as 6% in daily drinkers, Always be thankful of Allah swt for the All the favors which he did even without asking for us.