இயற்கையின் சவால் முடியுமா உங்களால் ?
இயற்கையின் சவால் முடியுமா உங்களால் ? (தில்இருந்தா யோசி)
(அவசியம் படிக்க)
ஒரு தட்டில் உயிர்சத்துள்ள பழங்களை காய்கறிகளை எடுத்து வைக்கவும். இன்னொரு தட்டில் அதே பழங்களையோ காய்கறிகளையோ சமைத்து வைக்கவும். ஒரு நாள் கழிந்த பின் சமையல் செய்த உணவுகள் கெட்டுப் போயிருப்பதையும் சமைக்காத உயிருள்ள பழங்களும் காய்கறிகளும் கெடாமல் இருப்பதையும்

காணலாம். எனவே சமைத்த உணவை விட இயற்கை உணவே மேல் என்பது புலனாகிறதல்லவா-?
இயற்கை உணவுகளை உண்பவர்களுக்கு உடலில் துர்நாற்றம் வீசுவதில்லை
இயற்கை உணவுகளை உண்பவர்களுக்கு உடலில் துர்நாற்றம் வீசுவதில்லை
.
இயற்கை உணவுகளை உண்பவர்களுக்கு சளித் தொல்லை ஏற்படுவதில்லை
.
இயற்கை உணவுகளை உண்பவர்களுக்கு மனித கழிவுகளான மலம் ஜலம் போன்றவை நாற்றமடைவதில்லை
.
இயற்கை உணவுகளுக்கு கண் ஒளி அதிகரிக்கும்
.
இயற்கை உணவுகளை உண்பவர்களுக்கு செவித்திறன் மிகுதியாகும். இயற்கை உணவுகளை உண்பவர்களுக்கு நுகரும் திறன் அதிகரிக்கும்.
இயற்கை உணவுகளை உண்பவர்களுக்கு உணவின் ருசி அதிகமாக தெரியும்
.
இயற்கை உணவுகளை உண்பவர்களுக்கு இதய துடிப்பு குறைந்து அதன் வாழ்நாள் உயரும்
.
இயற்கை உணவுகளை உண்பவர்களுக்கு சிறுநீரகத்தின் செயல் பாட்டு சுமை குறைந்து அதன் பலம் பெருகும்
.
இயற்கை உணவுகளை உண்பவர்களுக்கு கல்லிரலின் வேலை குறைந்து அதன் வலிமை பெருகும்
.
இயற்கை உணவுகளை உண்பவர்களுக்கு அவ்வுணவே இன்சுலீனை அளிப்பதால் சர்க்கரை நோய் வராது
. இயற்கை உணவுகளை உண்பவர்களுக்கு அவ்வுணவே தாது சத்துகளை அளிப்பதால் உடல் பலம் பெருகும். இயற்கை உணவுகளை உண்பவர்களுக்கு அவ்வுணவே வைட்டமின்களை அளிப்பதால் நோய்கள் வராது
பச்சைக் காய்கறி கீரை வகைகளை பழங்கள் முளைத்த பயறு வகைகளை நிச்சய மாகவே உண்ணப் பழகுவோம். நீரை அடிக்கடி அருந்தி மகிழுவோம். சமைத்த உணவினை கூடிய மட்டும் தள்ளி வைத்துமே ஓதுக்கிடுவோமே. சுமையே உப்பு புளிப்பு காரம் சுவைகள் இதனை தவிர்த்திடுவோமே. எதையும் மெள்ள மென்றே தின் போம். இயல்பாய் உடைகளை தளர்த்தி அணிவோம். மிதவெயில் காற்று மேனியில் படவே மெள்ள மாலையில் நடந்தே செல்வோம். வாரமோர் வேளை மாதமோர் நாளும் வகுத்தே உண்ணா விரத மிருப்போம். சீராய் நமது சீரண உறுப்புகள் செயல்பட்டிடுமே செம்மையடையுமே. காலையும் மாலையும் எளிய முறையில் கணக்காய் உடற்ப் பயிற்ச்சிகள் செய்வோம். சோலையில் சிறிதே ஓய்வும் கொள்வோம். இவ்வா றியற்கையில் இணைந்தே வாழ்ந்தால் என்றும் ஊசி மாத்திரை வேண்டாம் எவ்வகை நோயும் எட்டாது நம்மை இன்ப மகிழ்ச்சியில் என்றும் வாழலாம். மனிதனின் அடிப்படை தேவைகளில் மிகவும் முக்கியமானது உண்ண உணவு அந்த உணவு நோயை உண்டாக்கும் உணவாக இல்லாமல் நோயை எதிர்க்கும் உணவாக அமைவதே நலமல்லவா? நாம் உண்ணும் உணவின் இயல்புக்கேற்ற நமது இயல்பு அமையும் என்ற உண்மை. வானில் பறக்கும் பறவைகளும் வனத்தில் உலவும் விலங்குகளும் ருசிக்காக உண்பவையல்ல பசிக்காக உண்பவையே. எனவேதான் அவை வேகாத வெயிலை கண்டு வெம்புவதில்லை. அடைமழையைக் கண்டு அலறுவதில்லை. கடும் குளிரைக்கண்டு நடுங்குவதில்லை. ஆனால் நாவின் ருசிக்காக உண்டு பசியை மறந்து பலவிதமான வேக வைத்த உணவுகளை உண்பதால்தான் மழையின்காலம் தலைவலி இருமல் காய்ச்சலுடனே கஷ்டப்பட்டு வெயிலின்போது உஷ்ணம் உடலை வறுக்க வாட்டமடைகிறோம்.
மனிதகுலம் பிறந்தது முதல் இறந்த பின்பு கூட மாட்டு பாலை பயன்படுத்துகிறது.(வலுவான கால்களையுடைய குதிரை நீளமான உடலையுடைய ஒட்டகசிவிங்கி வலிமையான உடலையுடைய யானை போன்றவை கூட குழந்தை பருவம் முடிந்தவுடன் தாய்ப்பால் அருந்துவதை தவிர்க்கின்றன) ஆனால் மனிதன் மட்டுமே பால், மோர், தயிர் என்று பலவகைகளில் உணவில் சேர்த்து சளி, இருமல், காய்ச்சல் ஆகியவற்றை வரவழைத்து கொள்கிறான்.

டிப்ஸ்:-பருவகாலத்துக்கு ஏற்ப கிடைக்கும் உள்ளூர் காய்கறி, பழங்களையே வாங்குங்கள். முடிந்தவரை இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட, பூச்சிக்கொல்லிகள் குறைவாகப் பயன்படுத்தப்பட்ட காய்கறி, பழங்களை வாங்குங்கள்.வால்மார்ட், பிக்பஜார் பேன்ற