Sunday, August 3, 2014

மனிதனைக் கொல்லப் போகும் கோழி இறைச்சி! ஆய்வில் அதிர்ச்சித் தகவல்…!


கோழி இறைச்சியில் அதிக அளவு ஆன்ட்டி பயாடிக் இருப்பதாக ஆய்வு ஒன்றில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் விஞ்ஞானம் மற்றும் சுற்றுச்சூழல் மையம் நடத்திய இந்த ஆய்வில் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட கோழிக்கறியில் 40 மாதிரிகளில் அளவுக்கு அதிகமான ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் கலந்திருப்பது தெரியவந்துள்ளது.
ஆய்வின் தலைமை இயக்குனர் சுனியா கூறுகையில் ஆன்ட்டி பயாடிக் பயன்பாடுகள் மனித மருத்துவப் பயன்பாடுகளையும் மீறிச் சென்றுள்ளது.
கால்நடை வளர்ப்பு தொழிற்துறையினர் கோழிகள் எடை கூடுவதற்கும் வேகமாக வளர்வதற்கும் ஆன்ட்டி பயாடிக் மருந்துகளை அதிகம் பயனபடுத்துகின்றனர் இது முற்றிலும் தவறான அணுகுமுறை ஆகும் என்று தெரிவித்துள்ளார்.
ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் காரணமில்லாமல் வெறும் எடையை அதிகரிக்கவும் வளர்ச்சியை துரிதப்படுத்துவதற்காகவும் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
கறிக்கோழிக்கு அதிகம் ஆனட்டி பயாடிக் செலுத்தப்படுவதன் காரணமாக அதனை சாப்பிடும் மனிதர்களுக்கும் ஆன்ட்டி பயாடிக்கினால் குணப்படுத்த முடியக்கூடிய நோய்களையும் குணப்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு கிலோ சிக்கனில் 3.37 முதல் 131.75 மைக்ரோகிராம் வரை ஆன்ட்டி பயாடிக் மருந்துகளின் படிவுகள் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
மேலும் இறைச்சி உற்பத்தித் தொழிற்துறையில் அதிகமாக ஆன்ட்டி பயாடிக் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க அரசு கடும் சட்டங்களையும் கண்காணிப்பு முறையையும் கொண்டு வரவேண்டும் என்று விஞ்ஞானம் மற்றும் சுற்றுச்சூழல் மையம் தெரிவித்துள்ளது.

Wednesday, May 15, 2013

உடம்பு சரியில்லைன்னா, உடனே மெடிக்கல் ஷாப்புக்கு போகாதீங்க... உங்க வீட்டு சமையல் அறைக்கு போங்க...

உடம்பு சரியில்லைன்னா, உடனே மெடிக்கல் ஷாப்புக்கு போகாதீங்க... உங்க வீட்டு சமையல் அறைக்கு போங்க...


இன்றைய காலத்தில் மருந்து மாத்திரைகள் அதிகம் மார்க்கெட்டில் வந்துள்ளன. உடலில் எந்த ஒரு சிறிய பிரச்சனை என்றாலும், உடனே மருந்து கடைக்குச் சென்று, மாத்திரை வாங்கி போட்டால் சரியாகிவிடும். ஆனால் அவ்வாறு சிறு பிரச்சனைகளுக்கெல்லாம் மருந்து மாத்திரைகளை நாடினால், அது உடலுக்கு பிற்காலத்தில் வேறு சில பிரச்சனைகளை உண்டாக்கிவிடும். குறிப்பாக பலர் தலை வலி அல்லது மாதவிடாயின் போது ஏற்படும் வயிற்று வலிக்கு மாத்திரைகளை வாங்கி போடும் பழக்கத்தைக் கொண்டிருப்பார்கள். இப்படி போட்டால், அது பழக்கமாகிவிடுவதோடு, அந்த பழக்கம் ஒரு அடிமை போன்று ஆக்கிவிடும். அதிலும் பெண்கள் வயிற்று வலிக்கு எல்லாம் மாத்திரை போட்டால், பிற்காலத்தில் கருத்தரிக்கும் போது பிரச்சனையை ஏற்படுத்தும். ஆகவே எந்த ஒரு வலியானலும் முதலில் மாத்திரைகள் போடுவதை தவிர்த்து, அதற்கு இயற்கை வலி நிவாரணிகளை மேற்கொள்ள முயற்சிக்க வேண்டும். ஏனெனில் நமது சமையலறையில் நிறைய வலி நிவாரணிகள் இருக்கின்றன. அவை தற்காலிகமாக மட்டும் வலியை குறைப்பதில்லை, வாழ்நாள் முழுவதும் தான். மேலும் இவை வலியை குறைப்பதோடு, உடலுக்கு பல நன்மைகளையும் இலவசமாக கொடுக்கின்றன. இப்போது சமையலறையில் இருக்கும் இயற்கை வலி நிவாரணிகள் என்னவென்று பார்ப்போமா!!!

கிராம்பு:-பற்களில் வலி

பற்களில் வலி ஏற்பட்டால், அப்போது உடனே கிராம்பை மென்றால், பல் வலி போவதோடு, ஈறுகளில் இருக்கும் காயங்களும் குணமாகும். எப்படியெனில் இதில் யூஜினால் என்னும் வலியை போக்கும் பொருள் உள்ளது.

இஞ்சி:-தசை வலி

தசை வலி உடல் தசைகள் வலியுடன் இருந்தால், சிறிது இஞ்சியை அப்படியே கடித்து சாப்பிட்டால், வலி நீங்குவதோடு, மூட்டுகளில் இருக்கும் வீக்கங்கள் நீங்கி, உடல் வலிமையோடு இருக்கும்.

பூண்டு:-சளி, காதுவலி
சிலருக்கு அதிகப்படியான சளியால், காதுகளில் வலி உண்டாகும். அத்தகையவர்கள் தேங்காய் எண்ணெயில் சிறிது பூண்டு சேர்த்து கொதிக்க விட்டு, ஓரளவு வெப்பத்துடன் காதுகளில் ஊற்றினால், பூண்டில் உள்ள செலினியம் மற்றும் சல்பர், காதுகளில் இருக்கும் பாக்டீரியாக்களை அழித்து, காயங்களை குணப்படுத்தும்.

உப்பு:-தொண்டை வலி
தொண்டை வலியால் நிறைய பேர் அவஸ்தைப்படுவார்கள். அத்தகையவர்கள் தொண்டை வலியை குணப்படுத்த, வெதுவெதுப்பான நீரில், உப்பு சேர்த்து தொண்டையில் சிறிது நேரம் வைத்து கொப்பளித்து (Gargling) வந்தால், தொண்டையில் ஏதேனும் நோய்க்கிருமிகள் இருந்தால் போய்விடும். வேண்டுமெனில் அத்துடன் சிறிது பூண்டையும் சேர்த்துக் கொள்ளலாம்.

ஓட்ஸ்:-மாதவிடா பிரச்சனைகள்
மாதவிடாயின் போது ஏற்படும் வயிற்று வலிக்கு ஓட்ஸ் சிறந்த நிவாரணியாக இருக்கும். ஏனென்றால், அதில் வலியைப் போக்கும் மெக்னீசியம் மற்றும் ஜிங்க் அதிக அளவில் உள்ளது.

ப்ளூபெர்ரி:-சிறுநீரக தொற்று,
 சிறுநீரக பாதையில் ஏதேனும் தொற்றினால் உண்டாகும் வலிக்கு ப்ளூபெர்ரி சிறந்ததாக இருக்கும். ஏனெனில் இதில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட், பெருங்குடல் மற்றும் சிறுநீரகப் பாதையில் உள்ள நோய்க்கிருமிகளை அழித்து, வலியைக் குறைக்கும். எனவே இதனை தினமும் சாப்பிடுவது சிறுநீரக பாதைக்கு ஆரோக்கியமானது.

 மிளகுக்கீரை:- உடல் வலி
 உடல் வலிக்கு மிளகுக்கீரை நல்ல நிவாரணத்தை தரும். அதற்கு வெதுவெதுப்பான குளிக்கும் நீரில், 10 துளிகள் மிளகுக்கீரை எண்ணெயை ஊற்றி குளித்தால், நரம்புகள் புத்துணர்ச்சியடைவதோடு, உடல் வலியும் நீங்கிவிடும்.

 அன்னாசி:-
செரிமானப் பிரச்சனையால் வயிற்று வலி ஏற்படுபவர்களுக்கு, அன்னாசி ஒரு சிறந்த பழம். ஏனெனில் இதில் உள்ள புரோடியோலிடிக் நொதிகள், செரிமான மண்டலத்தை சீராக இயங்க வைத்து, வலியைக் குறைக்கும்.

மஞ்சள் தூள்:-
மூட்டுவலியால் அவஸ்தைப்படுபவர்கள், உணவில் மஞ்சள் தூளை சேர்த்து வந்தால், அதில் உள்ள குர்குமின் என்னும் பொருள், வலியை உண்டாக்கும் ஹார்மோன்களின் உற்பத்தியை முற்றிலும் தடுத்துவிடும்

 யூலிப்டஸ் ஆயில்:-
 தலைவலி வந்தால், அப்போது யூகலிப்டஸ் ஆயிலை தடவினால், தலைவலி குறைந்துவிடும். யூகலிப்டஸ் ஆயிலில் நோய் அழற்சி எதிர்ப்பு பொருள் அதிக அளவில் நிறைந்துள்ளது. இது தலைவலியை மட்டுமின்றி, தசை வலி, சுளுக்கு மற்றும் நரம்பு அழுத்தங்களையும் போக்கும்.

Tuesday, April 23, 2013

Natural ways to cope with the summer Veidt


Natural ways to cope with the summer Veidt


As the mercury soars across the country, we have for you 10 naturally cooling foods that’ll help your body cope with the heat and stay healthy.
It’s hot out there! As we reel under the intense summer heat, most of us try to avoid going outdoors and stay cool indoors instead. Another good way of staying comfortable is by consuming foods that are naturally cooling. Try these delicious options to beat the heat.
Naturally cooling foods
Tender coconut water is not only delicious and full of health benefits; it also has excellent cooling properties. Easily available, especially in southern India, this should be a staple of anyone’s summer diet.
2. Aam ka panna
Since mangoes are available only in the summer, we Indians know how to make complete use of the fruit. This includes makingaam ka paana out of raw mangoes. This tangy drink full of ice and a mix of other juices is perfect for a hot summer afternoon.
3. Butter milk (chach)
Curd in general is an excellent coolant. Make a nice, light buttermilk with it, full of spices and lots of ice and stay fresh and hydrated through the day.
Watch as nutritionist Gauri Rokkam prepares this delicious and extremely healthy butter milk.
4. Watermelon
You should be having lots of this crunchy, juicy fruit through the summer to stay cool and healthy. Along with being delicious, it’s also packed with antioxidants that are very good for you.
Try this delicious and cooling watermelon and ginger soup.
5. Fresh lime & water (nimboo paani)
How can we leave out good old nimboo pani, the staple of homes and restaurants across the country? While various versions and mixes are available, it’s best to have a nice chilled nimboo pani with salt, pepper and a little bit of sugar to stay cool.
6. Onion
Its tears-inducing properties notwithstanding, onions are an excellent coolant. Add a raw onion to your meal on a hot summer day and it can even protect you from a heat stroke. Just remember to keep some mints close at hand for later!
7. Gulkand (rose petals extract)
Gulkand, also known as a rose jam, is made from the extract of rose petals and has amazing cooling properties. If gulkand is hard to come by, you could even try a rose sherbet like rooh-afzah.
8. Cucumber
Stay as cool as a cucumber! This crunchy vegetable, full of water and lots of fibre is very cooling and should be added to your meals as much as possible.
9. Kokum
Kokum, which is used extensively in Gujarat and Konkan cooking for its tangy flavours is considered very healthy and also has great cooling benefits. Use it as a substitute for tamarind in your food.
10. Mint
Mint is a cooling herb that can be had in many forms. Add it to your food while you cook it, have it as a chutney or simply add it to your drinking water for a subtle flavour.
Also see, how you can stay hydrated in the summer.

Friday, April 19, 2013

சாலையோரக் கடைகளால் சுகாதாரச் சீர்கேடு.. எச்சரிக்கை 

ரிப்போர்ட்


சாலையோரக் கடைகளில் உணவுப் பொருட்கள் போதிய சுகாதாரப் பாதுகாப்புடன் தயாரிக்கப்படுவதில்லை என்பது பரவலாக கூறப்படும் குற்றச்சாட்டு. இத்தகைய சுகாதாரமற்ற உணவுகளை உட்கொள்வதால் 250 க்கும் மேற்பட்ட நோய்கள் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ் கிருமிகளால் இத்தகைய நோய்கள் ஏற்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.அதிலும் பேல் பூரி, பானி பூரி விற்கும் வடநாட்டு தள்ளுவண்டிக் கடைகள் நடைபெறும் அட்டுழியங்கள் சொல்லி விடியவில்லை

சமையல் செய்யும் முன்னர் கைகளைக் கழுவத் தவறுவது, கைகளைக் கழுவாமல் உணவு உட்கொள்வது, முறையாகச் சமைக்கப்படாத உணவுகள், முறையாகப் பதப்படுத்தாத பால் மற்றும் தண்ணீர் போன்ற காரணங்களால் இத்தகைய நோய்கள் ஏற்படுகின்றன என்பது மருத்துவர்களின் கருத்து.
கிருமிகள் உடலுக்குள் புகுந்து, சில மணி நேரங்கள் முதல், சில நாட்கள்வரை கடந்த பின்னர்தான் நோய்க்கான அறிகுறி தென்படத் தொடங்குகிறது. இந்த இடைப்பட்ட காலத்தில், உள்ளே செல்லும் நுண்கிருமிகள் உணவுக்குழாய்ச் சுவர்களில் தங்கி, பல்கிப் பெருகுகத் தொடங்குகின்றன. இவற்றில் சில கிருமிகள் ரத்த ஓட்டத்தில் கலந்து விடும். மற்ற சில கிருமிகளில் இருந்து வெளியேறும் விஷமானது குடலில் தங்கியிருக்கும் உணவில் கலந்து அதனை நச்சுத்தன்மை உள்ளதாக மாற்றி விடும். வாந்தி, வயிற்றுப்போக்கு, கடுமையான வயிற்று வலி போன்ற அறிகுறிகள் மூலம் நோய்த் தொற்று இருப்பதை தெரிந்து கொள்ளலாம்.
வயிற்றுப் போக்கு மற்றும் வாந்தியால் உடலில் நீர்வறட்சி ஏற்படும். இதற்கு கால் லிட்டர் தண்ணீரில் இரண்டு டேபிள் ஸ்பூன் சர்க்கரை மற்றும் அரை டேபிள் ஸ்பூன் உப்பு ஆகியவற்றைக் கலந்து குடிக்கத் தருவதன் மூலம் குணப்படுத்தலாம் என மருத்துவர்கள் ஆலோசனை தெரிவிக்கின்றனர்.
சமைக்கு முன்னரும், உணவு உட்கொள்ளும் முன்னரும் கைகளைக் கழுவுவதன் மூலம் சுகாதாரக் கேட்டினால் ஏற்படும் பெரும்பான்மையான நோய்களைத் தடுக்க முடியும்.

உணவுப் பாதுகாப்புச் சட்டம்
தமிழக அரசின் உணவுப் பாதுகாப்புச் சட்டம் நடைமுறையில் இருந்தாலும்கூட உணவுப் பாதுகாப்பு என்பது பல்வேறு தளங்களில் உறுதி செய்யப்படவேண்டியது அவசியமானதாகும்.
ஆரோக்கியமான உணவு, தூய்மையான சுற்றுப்புறம், பராமரிப்பு முதல் பறிமாறுதல் வரை சுகாதாரம் இதுதான் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் முக்கிய அம்சங்கள். இந்த சட்டத்தை முழுமையாக ஆதரிப்பதாக கூறும் உணவக உரிமையாளர்கள், பல்வேறு நோய்களை பரப்புவதில் முக்கிய பங்கு வகிக்கும் சுற்றுப்புறச் சுகாதார கேட்டிற்கு யார் பொறுப்பு என்று கேள்வி எழுப்புகின்றனர்.
உணவு சமைக்க பயன்படுத்தப்படும் குடிநீரில் கூட குறிப்பிட்ட அளவிற்கு மேல் குளோரின் இருப்பதற்கு யார் பொறுப்பு என்று கேள்வி எழுப்புவதோடு அதில் சில திருத்தங்கள் செய்து நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும் என ஓட்டல் அதிபர்கள் தெரிவிக்கின்றனர்.
உணவு பாதுகாப்பு என்பது உடல் நலன் மற்றும் உயிர் சார்ந்த விஷயமாக உள்ளதால் அதற்கான சட்ட சரத்துக்களை பின்பற்ற வேண்டியது சிறு, குறு மற்றும் பெரும் உணவகங்களின் கடமை. அதேபோல, அவர்கள் பின்பற்றுகிறார்களா என்பதைக் கண்காணிப்பது அரசு அதிகாரிகளின் கடமை. எனினும், பொதுவான சூற்றுச்சூழலையும், சுகாதாரத்தையும் பேணிக்காப்பது ஒவ்வொருவரின் கடமை என்கின்றனர் சுகாதார வல்லுனர்கள்.

பாதுகாப்பான உணவை வலியுறுத்தி பிரசாரம்
வீட்டில் நாம் உண்ணும் உணவாக இருந்தாலும் சரி, உணவகங்களில் உண்ணும் உணவாக இருந்தாலும் சரி, அது நோயை உருவாக்காத அளவுக்கு சுத்தமானதாகவும் பாதுகாப்பானதாகவும் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் தேசிய பிரச்சாரம் தமிழகத்தில் தொடங்கப்பட்டிருக்கிறது.
நாம் வீட்டிலோ, உணவகங்களிலோ உட்கொள்ளும் உணவு பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்வதற்காக 2006 ஆம் ஆண்டில் பாதுகாப்பான உணவுக்கான சட்டம் இயற்றப்பட்டது.
விளைநிலத்திலிருந்து நம் கைக்கு உணவு வரும் வரைக்கும் பல்வேறு நிலைகளில் அதனை உறுதி செய்வதற்கான அமைப்புகளும் மத்திய, மாநில அளவில் இந்தச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டன. நாம் வாங்கும் உணவுப் பொருள் பாதுகாப்பாக இருக்கிறதா என்பதை மளிகைக் கடைகளிலும் உணவகங்களிலும் நாமே கேட்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும். தேசிய அளவிலான பிரச்சாரம் தமிழகத்தில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்தால் வியாழக்கிழமையன்று தொடங்கி வைக்கப்பட்டது.
இந்தப் பிரச்சாரம் தமிழகத்தின் சென்னையிலும் வேறு நான்கு மாவட்டங்களிலும் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இது பிற மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுத்தமான உணவைத் தயார் செய்வதும் அதனை நியாயமான விலையில் வழங்குவதும் சாத்தியம் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் லாபத்தை மட்டுமே கருத்தில் கொண்டு தரக்குறைவான உணவுப் பொருள்களைப் பயன்படுத்துவதும் உணவுப் பொருள்களில் கலப்படம் செய்வதும் பெரும் சவால்களாக உள்ளன. இதனைக் கேள்விக்கு உட்படுத்துவதுதான் பிரச்சாரத்தின் முக்கிய நோக்கமாகும்.
சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, வேலூர் ஆகிய இடங்களில் மே மாதம் வரை ஊர்தி மூலமாகவும் விளம்பர சுவரொட்டிகள், பல்வகை ஊடகங்கள் மூலமும் இந்தப் பிரச்சாரம் நடைபெற உள்ளது. நடிகர்கள் ரேவதி, நாசர், சரண்யா ஆகிய்யோர் இதற்கான குறும்படங்களில் நடித்துள்ளனர். இதற்கான பயிற்சி பெற்ற 60 மாணவ தூதுவர்கள் தயாராகியுள்ளனர்.

பாதுகாப்பற்ற உணவு விற்றால் தண்டனை
பாதுகாப்பான உணவை உறுதி செய்ய நுகர்வோர் தரப்பிலும் விழிப்புணர்வு அவசியம். உணவுக் கலப்படத்தை எதிர்த்து நடவடிக்கை எடுக்க அனைத்து நுகர்வோருக்கும் அதிகாரம் அளித்திருக்கிறது, நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம். உணவுப் பொருள்கள் வாங்கும் அனைவருக்கும் அவற்றைச் சோதித்துக் கொள்ளும் உரிமை உண்டு.
தமிழ்நாட்டில் சென்னை கிங் ஆய்வு நிலையம், கோயம்புத்தூர், மதுரை, தஞ்சாவூர், சேலம், திருநெல்வேலி ஆகிய இடங்களிலுள்ள உணவுப் பகுப்பாய்வாளர்கள் ஆகியோரிடம் கட்டணம் செலுத்தி உணவைப் பகுப்பாய்வு செய்து கொள்ளலாம்.
உணவு பாதுகாப்பில்லாதது என்று உறுதி செய்யப்பட்டால், ஆய்வுக் கட்டணம் திருப்பி அளிக்கப்படும். உணவுப் பொருளின் லேபிள்களில் தயாரிப்பு தேதி, பயன்படுத்துவதற்கு உகந்த காலகட்டம், உள்ளிருக்கும் பொருள்கள் பற்றிய விவரம், அதிகபட்ச விலை, மொத்த எடை, ஊட்டச்சத்து விவரம், உணவுத் தயாரிப்பாளரின் முகவரி ஆகியவை சரிவர இடம்பெறவில்லையெனில், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்திற்கு தகவல் தெரிவித்து 500 ரூபாய் பரிசு பெறலாம்.
உணவுப் பாதுகாப்பு மற்றும் தர சட்டம் 2006ன் படி பாதுகாப்பற்ற உணவை விற்றால் ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதமும் ஆறு மாத கால கடுங்காவல் தண்டனையும் வழங்கலாம்.
பாதுகாப்பற்ற உணவினால் இறப்பு நிகழ்ந்தால் பத்து லட்சம் ரூபாய்க்கு குறையாத அபராதம், ஏழு ஆண்டு கடுங்காவல் தண்டனை அல்லது ஆயுட்கால சிறை வழங்கப்பட இந்தச் சட்டத்தில் இடம் இருக்கிறது. தரக் குறைவான உணவுக்கு ஐந்து லட்சம் ரூபாய் வரை அபராதமும் உணவு பற்றிய திசைதிருப்பும் விளம்பரத்திற்கு பத்து லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்க சட்டம் வழிவகை செய்கிறது.
பாதுகாப்பற்ற உணவை உற்பத்தி செய்பவரே தண்டனைக்கு இலக்காவார் என்று உணவுப் பாதுகாப்பு மற்றும் தர சட்டம் 2006 கூறுகிறது. காலாவதியான தேதிக்கு பிறகு உணவுப்பொருளை விற்பனை செய்தால் மொத்த விற்பனையாளர், வினியோகஸ்தர் தண்டனைக்கு ஆளாவார். சுகாதாரமற்ற சூழலில் உணவுப் பொருளை வைத்திருந்தாலும் மொத்த விற்பனையாளர், வினியோகஸ்தர் தண்டனைக்குரியவராவார்.

பற்களை பாதுகாக்கும் உணவு வகைகள் மற்றும் உணவு முறைகள்

உணவின் மூலம் பற்களை பாதுகாப்பது எப்படி 



பற்களை பாதுகாக்கும் உணவு வகைகள் மற்றும் உணவு முறைகள்  

நம்மில் பலபேருக்கு பல்தான் தகறாறு. பண்டையகால மனிதர்களைபாருங்கள் என்பது வயதிலும் அனைத்துப்பல்லும்  உறுதியாக இருக்கும். மொத்தம் உள்ள 32 பல்களில் ஒரு முறை எண்ணிப்பாருங்கள். 20லிருந்து 30க்குள் தான் இருக்கும். போனதுபோகட்டும்.இருப்பதையாவது எப்படி பாதுகாப்பது எனப்பார்ப்போம். 

முதலில் பற்களின் உபயோகங்களை பார்ப்போம்.

பற்களை வைத்து ஒருவரின் ஆரோக்கியம் நிர்ணயிக்கப்படுகிறது.  உங்கள் புன்னகை உங்கள் ஆரோக்கியத்தோடு தொடர்புடையது மட்டுமல்ல உங்கள் அழகோடும் தொடர்புடையது. பற்கள் பளிச்சிட சத்தான உணவை சாப்பிடவேண்டும் என்று பரிந்துரைக்கின்றனர் மருத்துவர்கள்.


1)நார்ச்சத்து உணவுகள்
2)யோகர்டு
3)கிரீன் டீ
4)பெரிய வெங்காயம்
5)எள்
6)தண்ணீர்
7)பல் வலிமைக்கு ரெசிபியாக சில வகைகள்
8)சத்தான உணவு
9)பல் வலிக்கு பாட்டி வைத்தியம்
10)உணவு சம்மந்தமில்லாத ஒரு அவசியமான பின் குறிப்பு

1)நார்ச்சத்து உணவுகள்:-
உயர்தர நார்ச்சத்து நிறைந்த செலரி, ஆப்பிள், காரட்,போன்றவை பற்களில் உள்ள கிருமிகளுடன் போரிடுகிறது. இவை ஆரோக்கியமான உமிழ்நீரை உற்பத்தி செய்கின்றன. ஆராஞ்சு, திராட்சை போன்றவை வாய் ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவாக மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். வைட்டமின் சி சத்து நிறைந்த உணவுகளையும் உட்கொள்வது பற்களின் ஆரோக்கியத்திற்கும் அழகிற்கும் ஏற்றது. கிவி பழத்தில் வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது. இது பற்களின், ஈறுகளின் ஆரோக்கியத்திற்கு ஏற்றது.

2)பற்களை பாதுகாக்கும் யோகர்டு:-
பற்களின் இடுக்குகளில் பாக்டீரியா குடிபுகுந்தால் பற்கள் சொத்தையாகும், சுவாசம் ஆரோக்கியமாக இருக்காது, வாய் துர்நாற்றம் வீசும். எனவே ஆரோக்கியமான பற்களுக்கு யோகர்டு சாப்பிடலாம். அதில் உள்ள கால்சியல் பல் சொத்தையை தடுக்கும்.

3)கிரீன் டீ:-
பச்சை தேயிலை எனப்படும் கிரீன் டீ பருகுவது பற்களில் அசுத்த பாக்டீரியாக்கள் தங்குவதை தடுக்கும். அதேபோல் சீஸ் பற்களுக்கு அவசியமானது. இதில் உள்ள வைட்டமின் டி, கால்சியம் பற்களின் ஆரோக்கியத்திற்கும் அழகிற்கும் ஏற்றது. பிஹெச் மதிப்பை சமநிலையில் வைக்க உதவும்.

4)பெரிய வெங்காயம்
பற்கள் முத்துப்போல பளிச்சிட பெரிய வெங்காயத்தை பச்சையாக சாப்பிடலாம். இது பாக்டீரியா எதிர்ப்பு பொருளாக செயல்படுகிறது. பாக்டீரியாக்களை கொல்கிறது. எலுமிச்சை ஜூஸ், ஆரஞ்சு ஜூஸ் பற்களை பருகுவதால் பற்கள் வெண்மையாகும். ஸ்ட்ராபெரி பழம் இயற்கையிலேயே பற்களை வெண்மையாக்கும் பழமாக திகழ்கிறது. நன்றாக கடித்து தின்றால் பற்கள் ஆரோக்கியமான வெண்மையுடன் பிரகாசிக்கும்.

5)வலிமை தரும் எள்:-
எள் பற்களின் சுத்தத்திற்கு சிறந்த உணவுப் பொருளாகும். நல்லெண்ணெயை வாயில் ஊற்றி ஆயில் புல்லிங் செய்வது பற்களின் வலிமைக்கு ஏற்றது. ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அடங்கிய உணவுகளை உட்கொள்வதும் பற்களுக்கு வலிமை தரும்.

6)தண்ணீர் குடிங்க:-
சரியான அளவு தண்ணீர் பருகுவதும் வாய், பற்களின் ஆரோக்கியத்திற்கு ஏற்றது. இது தேவையான அளவு உமிழ்நீரை சுரக்கச் செய்வதோடு பற்களில் சொத்தை ஏற்படாமல் தடுக்கிறது.
பாலக்கீரை சூப்: ஒரு கட்டு பாலக்கீரை, பெரிய வெங்காயம்- 1, தக்காளி- 1, பூண்டு-2 ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு டீ ஸ்பூன் அளவுக்கு சீரகம், மிளகு அரைத்துக் கொள்ளவும். குக்கரில் எண்ணெய் விட்டு தாளித்து தக்காளி, வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கி, சீரகம் - மிளகுத்தூள் சேர்க்கவும். இத்துடன் கீரை, மஞ்சள் தூள் மற்றும் சிறிதளவு தண்ணீர், உப்பு சேர்த்து குக்கரில்  ஒரு விசில் நேரத்திற்கு வேக வைத்து, பின் கடைந்து சூப்பாக அருந்தலாம். இதில் வைட்டமின், மினரல் சத்துகள் உள்ளன. 

7) வலிமைக்குரெசிபி

வெண்டை பிரை:-வெங்காயம், தக்காளி, ஒரு டேபிள் ஸ்பூன் பூண் டுத் துருவல் ஆகியவற்றை எண் ணெயில் வதக்கி மசித்துக் கொள் ளவும். இத்துடன் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து பேஸ்ட் போல பிசைந்து, 10 வெண்டைக்காயை நீளவாக்கில் நறுக்கி உள்ளே ஸ்டப் செய்யவும். தோசை கல்லில் எண்ணெய் விட்டு மிதமான தீயில் வெண்டைக்காய் பிரை செய்யலாம். இதில் வைட்டமின் சி சத்து உள்ளது. 

காலிபிளவர் கட்லட்:-ஒரு காலிபிளவர் பூ கட் செய்து உப்புத் தண்ணீரில் போட்டு சுத்தம் செய்யவும். அரை கப் முட்டைக்கோசை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இவற்றை எண்ணெயில் வதக்கிக் கொள்ளவும். இத்துடன் தேவையான அளவு உப்பு, கரம்மசாலாத் தூள், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி உருண்டை பிடித்துக் கொள்ளவும். கான்பிளவர் மாவு, ரொட்டித்தூள் ஆகியவற்றில் உருட்டி தட்டி தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு வேகவைத்து எடுக்கவும். இந்த கட்லட்டில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது.

8)சத்தான உணவு:-
பொதுவாக 30 வயதுக்கு மேல் பல காரணங் களால் பல் பாதிப்பு அதிகரிக்கிறது. மேலும் சிறு வயது முதல் கால்சியம், அயோடின் மற்றும் பாஸ்பரஸ் ஆகிய சத்துக் குறைபாட்டினால் பற்கள் விரைவில் வலுவிழக்கின்றன. இவற்றை தடுக்க பழங்கள், காய்கறிகள் அதிகம் சாப்பிட வேண்டும். வைட்டமின்-சி சத்து அதிகம் உள்ள ஆரஞ்சு, சாத்துக்குடி , எலுமிச்சை, பப்பாளி, திராட்சை இவ ற்றில் ஏதாவது ஒன்றை தினமும் சாப்பிட வேண்டும். கேழ்வரகு, மீன், கீரை வகைகள், முட்டைக்கோஸ், காளிபிளவர், அடிக்கடி சேர்க்கவும். தினமும் இரண்டு டம்ளர் பால் அவசியம். தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். இனிப்பு, உப்பு, காரம் குறைத்து கொள்ளவும். சூடாகவும், காரமாக சாப்பிடுவதை தவிர்க்கவும். அப்படி சாப்பிட நேர்ந்தால் உப்புத் தண்ணீரால் வாய் கொப்பளிக்கவும். இனிப்பு சாப்பிட்ட பின் கண்டிப்பாக பிரஷ் செய்யவும். வயதாகும் போது எதிர்ப்பு சக்தி குறைபாட்டின் காரணமாகவே பல் தேய்மானம் மற்றும் பல் இழப்புகள் ஏற்படும். பல்லை சுத்தமாகப் பராமரித்தல், சத்தான உணவு ஆகியவையே பல் ஆரோக்யத்தை பாதுகாக்க உதவும், என்கிறார் உணவு ஆலோசகர் சங்கீதா. 

9)பாட்டி வைத்தியம்
*  பூண்டு, வெங்காயத்தை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.  
*  ஆலமர விழுதுகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி காய வைக்கவும். இத்துடன் படிகாரம் சேர்த்து அரை த்து வைத்து கொண்டு, அதில் பல் துலக்கினால் பல் தொடர்பான பாதிப்    புகள் குறையும். 
*  ஆலமர பட்டையில் கஷாயம் வைத்து வாய் கொப்பளித்தால் பல் வலி குறையும். 
*  நல்லெண்ணெய் 20 மிலி அளவுக்கு வாயில் ஊற்றி அடக்கி இருபது நிமிடம் கழித்து வாய் கொப்பளித்து துப்பினால் வாயில் ஏற்படும் கிருமித் தொற்று குணமாகும். 
*  கிராம்பு, கொட்டைப்பாக்கு இரண்டையும் சம அளவில் எடுத்து பொடி செய்து பல் துலக்கினால் பல்வலி குணமாகும். ஈறுகள் பலப்படும். 
*  கொய்யா இலையை மென்று தின்று வெந்நீரில் வாய் கொப்பளித்தால் பல் கூச்சம் விலகும். 
*  கொய்யா இலை, கருவேலம்பட்டை, உப்பு மூன்றையும் சம அளவில் எடுத்து பொடி செய்து பல் துலக்கி வந்தால் பல் வலி உள்ளிட்ட அனைத்து நோய்களும் விலகும்

பின் குறிப்பு :-
*உணவு வேளையில் நீங்கள் உண்ண வேண்டிய கடைசிப்பொருள் நறுக்கப்பட்ட பச்சைக்காய்கறிகளாகவோ அல்லது பழங்களாகவோ இருக்கட்டும். மறந்தும் கூட இனிப்பு பொருட்களை சாப்பிட வேண்டாம். சாப்பிடும் போது ருசியாக இருக்கும் உணவுவாயில் சிறிது நேரம் தங்கி விட்டால்,துர்றாற்றத்திற்கு காரணமாக அமைகிறது.
*உணவு உட்கொண்டு முடித்தவுடன் வாயை  கொப்பளித்தல் வேண்டும்.
10)உணவு சம்மந்தமில்லாத ஒரு அவசியமான பின் குறிப்பு :-
காலையில் ஒருமுறை இரவில் ஒருமுறை பல் துலக்கி நாக்கை சுத்தம் செய்ய வேண்டும்.



Thursday, April 18, 2013

வாழ்நாளை அதிகரிக்கும் உணவுப் பழக்கங்கள்     
பாகம் 2 (ஞாபக சக்தி)


ஆக்கம்:- 



உங்கள் வாழ்வில் என்றும் அக்கரை கொண்ட சுவைஇன்பம் குழுமம் 


ஞாபக சக்தியை அதிகரிக்கும் எளிய உணவு முறைகள்
கம்ப்யூட்டரில் இருப்பது போல மனிதனுக்கும் ‘மெமரி சிப்ஸ்’கள் உள்ளன. பெரும்பாலும் இந்த நினைவுக் காப்பங்களின் வலிமையும் எண்ணிக்கையும்
பரப்பரைத்தன்மை உடலின் ஊட்டம் ஆகியவற்றைப் பொறுத்தே அமைகின்றன. மாவுச்சத்து வைட்டமின்கள் அமினோ அமிலங்கள் தாது உப்புக்கள் முதலியவையே இந்த ஊட்டத்தை நிர்ணயிக்கவல்லவை.
மனித மூளையில் 100 பில்லியன் நரம்பணுக்கள் உள்ளன. இவை உணவில் கிடைக்கும் வைட்டமின்களைப் பொறுத்து இரசாயன மாற்றங்கள் ஏற்படுத்தியபடி இருக்கின்றன.
ஒரு நாளைக்குப் பத்து இலட்சம் தடவைகளுக்கு மேல் நமது சிந்தனைகளை வகைப்படுத்தும் வேலையை மூளை செய்து கொண்டிருக்கிறது. தினசரி நம் உணவில் கிடைக்கும் (எரிக்கும்) மொத்தக் கலோரியல் முப்பது சதவிகிதத்தை மூளைதான் பயன்படுத்திக் கொள்கிறது. எனவே வயது வித்தியாசம் இன்றி மூளை நன்கு செயல்பட வேண்டும் எனில் இனிப்பு மற்றும் மாவுச்சத்துப் பொருட்களில் உள்ள குளுகோஸில் இருந்துதான் தேவையான சக்தி தொடர்ந்து கிடைக்க வேண்டும்.
இந்தச் சத்துணவில் குறைவு ஏற்படும் போது ஞாபக சக்தியிலும் சிக்கல் வந்துவிடுகிறது.
இது மட்டுமல்ல இரத்த ஓட்டம் தேவையான ஆக்ஸிஜனை மூளைக்கு விநியோகித்து புத்துணர்ச்சியை ஏற்படுத்துவதும் முக்கியமானது. தேவையான சத்துணவு கிடைக்காத போது மூளைக்கு ஆக்ஸிஜன் கிடைப்பது குறைந்த ஞாபகசக்தியில் குறைபாடு ஏற்படுகிறது.
இதைத் தடுக்க சிறந்த உணவு முறையையே மருந்தைப்போல் பயன்படுத்தினால் புத்திக்கூர்மையும் ஞாபக சக்தியும் அதிகரிக்கும்.
ஞாபக சக்தி குறைவாக இருப்பவர்கள் பைரிடாக்ஸின் என்ற வைட்டமின் அதிகம் உள்ள பாதாம் பருப்பு சோயா பீன்ஸ் முதலியவற்றை நன்கு உணவில் சேர்க்க வேண்டும். இது நம் உடலில் சோடியம் மற்றும் பொட்டாசியம் ஆகிய உப்பு வகைகளை சமன் செய்து உடலை கட்டுப்பாட்டில் வைக்கிறது. இத்துடன் பி12 வைட்டமினை உடல் ஏற்றக் கொள்ளவும் உதவுகிறது.
தேவையான அளவு ஆழ்ந்து சிந்தித்துச் செயல்பட பாலிக் அமிலம் அதிகம் உள்ள தண்டுக்கீரை கொண்டைக்கடலை முதலியவற்றை சேர்த்துக் கொள்வது அவசியம்.
பால், தயிர் மற்றும் அசைவ உணவு வகைகளால் பி12 கிடைப்பதால் சோம்பேறித்தனம் குறையும். சைவ உணவுக்காரர்கள் பி12ஐ ஊசியாகப் போட்டுக் கொள்ளவும்.
அரிசி கோதுமை கேழ்வரகு மேற்கண்ட உணவு வகைகளுடன் இரும்புச்சத்து நிறைந்துள்ள பேரிச்சம்பழம் பட்டாணி முதலியவற்றையும் தினமும் உணவில் சேர்த்து வந்தால் நரம்புமண்டலம் அமைதியாகி மூளை சுறுசுறுப்பாக இருக்கும். இது சிந்தித்து செயல்படுவதில் அக்கறை காட்டத் தூண்டிக் கொண்டே இருக்கும். இந்த உண்மைகளை போஸ்டனின் டப்டஸ் பல்கலைக் கழகமும் வேல்ஸின் ஸ்வான்ஸீ பல்கலைக்கழகமும் பல ஆண் பெண்களையும் பரிசோதனை செய்து கண்டுபிடித்தன.
எல்லா வயதுக்காரர்களும் கூர்மையாகச் சிந்திக்க அரிசி, பருப்பு மற்றும் பழவகைகளைத் தவிர்த்துவிடாமல் உணவில் சேருங்கள்.
ஞாபக சக்தியை அதிகரிக்கும் எளிய உணவு முறைகள்
ஆரஞ்சு கொய்யா திராட்சை ஆப்பிள் வாழைப்பழம் முலாம்பழம் பேரீச்சம்பழம் காரட் அன்னாசி காலிபிளவர் முட்டைக்கோஸ் பசலைக்கீரை கொத்துமல்லி, முருங்கைக்கீரை பச்சைப் பட்டாணி பால் தயிர் ஈரல் போன்ற உணவு வகைகளில் உள்ள பீட்டா கரோட்டின் வைட்டமின் சி இரும்புச்சத்து முதலியன ஞாபக சக்தியை அதிகரிக்க வல்லவை.
இனிப்பு வகைகளைச் சாப்பிடுவதால் அசிட்டியல்சோலைன் என்ற பொருளை மூளை நரம்புகள் வெளியேற்றுகின்றன. இதனால் ஞாபசக்தி அதிகரிக்கிறது.
குளுகோஸ் சாப்பிடுவது நன்று. இல்லையெனில் மாதம் ஒரு நாள் கோதுமை அல்வா சாப்பிடலாம். இதில் சோலைன் அதிகம் இருக்கிறது. ஆனால் முடிந்தவரை இயற்கை இனிப்புகளையே விரும்புங்கள். செயற்கை இனிப்புத் தேவை இல்லை. ஆக ஞாபகச் சக்தியையும் சிந்தனைத் தெளிவையும் தேர்ந்தெடுக்கப்பட்ட உணவின் மூலம் எளிதில் அதிகரித்துக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது.

7 Tips to Prevent Uric Acid Disease/GOUT


7 Tips to Prevent Uric Acid Disease/GOUT


Some of these tips can help prevent an increase in uric acid in the blood. These tips include changes in lifestyle and diet should be regularly and strictly adhered to, if not affected by gout or uric acid disease relapse.

1. Lose Weight In Staged
If overweight, reduce gradually, because losing weight can help lower uric acid levels. But avoid excessively strict diet, follow a healthy diet here. Losing weight drastically with excessive dieting may precipitate an attack of gout. That’s great if accompanied with regular exercise.

2. Eat Foods Low Purine (Diet Low Purine)

Purine is an organic component that causes gout. These substances are needed in the body to normal limits are met.@Restrict foods high in purines -
Organ meats such as liver, kidney, heart
Selected fish and shellfish
Meat & yeast extracts brewers and bakers yeast
Meat soups & stock cubes. Foods that can cause gout such as beans, mushrooms, cooked spinach, and mustard greens, goat meat, offal and lard (fat), shellfish, duck and turkey, salmon, mackerel, sardines, crab, shrimp , anchovy and some other fish, cream and ice cream, and sweet bread. Some foods containing purine content seen in the list below. It should be remembered that the sensitivity of a person to be exposed to uric acid after eating these foods will vary.

3. More White Water Consumption

Approximately 90% of gout is caused by the inability of the kidneys remove uric acid from the body completely through urine. Water consumption is believed to improve the disposal of substances that are not useful as excessive uric acid from the body. Drink at least 6-8 glasses a day.

4. Expand Food Containing Calcium and High Antioxidant

Eating calcium-rich foods such as vegetables and fruits such as bananas, potatoes, avocados, milk and yogurt. Eating fruits rich in vitamin C, especially citrus and strawberry.

5. Avoid Alcohol and Soft Drink Consumption

Alcohol can lead to increased production of uric acid, while soft drink consumption may inhibit the absorption of calcium and calcium even throw in vain.

6. Limit your consumption of fried food

Fats and oils turn rancid at high temperatures such as in frying time. Moreover, if the used oil is oil that is used repeatedly. Rancid fats which can quickly destroy vitamin E and causes an increase in uric acid in the blood.

7. Increase Sexual Activity

These tips are more appropriate for those who have become husband and wife. Sexual activity, such as a kiss can make the body become more relaxed, so easy to boost the immune system. In addition, sexual intercourse can facilitate the production of urine so it can reduce the concentration of uric acid in the blood.

Discipline, Awareness and Healthy Habits.

Again the key here is discipline. You should also take the time to learn about the food you eat, and take note of foods that seem to trigger your gout. There is no set uric acid level that triggers gout attacks, each person has a different threshold so you should pay attention to how your body reacts. You should also form some healthy habits to reduce uric acid and prevent gout attacks.

If you are unsure about a part of your diet, consult your doctor about it. Even though there are a lot of resources online to help you, consulting with your doctor is still the best way to fine tune your diet and reduce uric acid levels.

Must Share